பிரம்மாண்டமாக புது வீடு கட்டி இருக்கும் மதுரை முத்து..! மதுரை முத்துவின் ஹோம் டூர் வீடியோ இதோ.!

வெளியிட்டது

மதுரை முத்து தற்போது மிக பிரமாண்டமான வீடு ஒன்றை கட்டி இருக்கிறார். அந்த வீட்டின் ஹோம் டூர் வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அசத்த போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலமாக அறிமுகமானவர் தான் மதுரை முத்து. இவர் தமிழகத்தின் மதுரை மாவட்டம், உள்ள அரசபட்டி என்ற ஊரில் பிறந்தார். இவருக்கு மனைவி லேகா மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இவரின் மனைவி லேகா என்ற வையம்மாள் தனது 32-வது வயதில், 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3 ஆம் தேதி கார் விபத்தில் உயிரிழந்தார்.பின்னர் சிறுது மாதங்கள் கழித்து, தனது மனைவி வையம்மாளின் தோழியான பல் மருத்துவர் நீத்து என்பவரை இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டள்ளது.

பிரம்மாண்டமாக புது வீடு கட்டி இருக்கும் மதுரை முத்து..! மதுரை முத்துவின் ஹோம் டூர் வீடியோ இதோ.! 1

பின்னர் இவருக்கு குக் வித் கோமாளி சீசன் 2வில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. எனினும் ஒழுங்காக சமைக்காத காரணத்தினால் வெளியேற்றப்பட்டார். ஆனால் ரசிகர்களின் வேண்டுகோளின்படி மீண்டும் guest ரோலாக அனைத்து எபிசோடுகளிலும் பங்கேற்று மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். சீசன் 2 சீசன் 3 சீசன் 4 என குக் வித் கோமாளியின் அனைத்து சீசன்களிலும் தற்போது கெஸ்ட் ரோலாக பங்கேற்று காமெடிகளை செய்து வருகிறார். அதுவும் இவர் செய்யும் பிராப்பர்ட்டி காமெடிகள் மிகவும் காமெடியாக இருக்கும். ஒரு சிறிய மான் பொம்மையை எடுத்துக் கொண்டு கையில் வைத்துக்கொண்டு இது இப்போது மான், பின்னர் அதை தூக்கி எறிந்து விட்டு இப்போது அது “அந்தமான்” என்று காமெடி செய்து கலக்கி வருகிறார். சிறியவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு காமெடியனாக சின்னத்திரையில் வலம் வருகிறார் மதுரை முத்து.


தற்போது இவர் தனது சொந்த ஊரில் பிரம்மாண்டமான வீடு ஒன்றை கட்டியிருக்கிறார். அந்த வீட்டின் ஹோம் டூர் வீடியோவை தற்போது வெளியிட்டு இருக்கிறார். அந்த வீட்டின் வீடியோவை நீங்களும் காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

Youtube Video Embed Code Credits: Madurai Muthu Alaparai

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்