“ஜெயலலிதா அம்மாவே இவங்கள தான் செலக்ட் பண்ணாங்க…ஆச்சரியத்தில் உறைந்த ஹன்சிகா”!!

வெளியிட்டது

நடிகை ஹன்சிகா குழந்தை நட்சத்திரமாக ஹிந்தி சினிமாவில் அறிமுகமாகி பின்னர் தெலுங்கு சினிமாவில் கால் வைத்து, தமிழில் அறிமுகமான சில ஆண்டுகளிலேயே முன்னணி நடிகையாக மாறினார். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழி முன்னணி நாயகர்களுடன் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"ஜெயலலிதா அம்மாவே இவங்கள தான் செலக்ட் பண்ணாங்க...ஆச்சரியத்தில் உறைந்த ஹன்சிகா"!! 1

தமிழில் விஜயுடன் வேலாயுதம், புலி, தனுஷுடன் மாப்பிள்ளை, சிம்புவுடன் வாலு, ஜெயம் ரவியுடன் தொடர்ந்து எங்கேயும் காதல், ரோமியோ ஜூலியட், போகன் என வரிசயாக வணீக ரீதியில் வெற்றியடைந்த படங்களில் நடித்து வந்தார். கொஞ்ச காலங்களில் உடல் எடை கூடியதால், சற்று பட வாய்ப்புகள் குறைய, இப்பொது அதிக அளவில் உடலெடை குறைத்து “மகா” என்ற படத்தில் நடித்துள்ளார்.

குறுகிய காலத்துலே இது அவருடைய 50வது படமாக தயாராகியுள்ளது. இப்பொது இந்த படம் வெளியீட்டிற்கு தயாராகியுள்ள நிலையில் அண்மையில் இந்த படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் ஹன்சிகா நடிக்க சிறப்பு கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார். சனம் ஷெட்டி, தம்பி ராமையா, ஸ்ரீகாந்த், மனஸ்வி ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தை யூ.ஆர்.ஜெமீல் என்பவர் இயக்கியுள்ளார். படம் வருகிற ஜூலை 22ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அண்மையில் சென்னையில் படத்தின் ஆடியோ லான்ச் விழா நடைபெற்றது.

இதில் பல்வேறு நட்சத்திரங்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அப்போது பேசிய இயக்குனர்கள் சங்க தலைவர் இயக்குனர் ஆர்.கே.செல்வமணி, “முதன் முதலில் எனக்கு நடிகை ஹன்சிகாவை அறிமுகமானது 100வது வருட தமிழ் சினிமா கொண்டாட்ட விழாவில் மறைந்த புரட்சி தலைவி அம்மாவின் பாடலுக்கு நடனமாட 5 நாயகிகள் பெயரை முடிவு செய்து அனுப்பினோம், அப்போது அம்மாவே இவர் ஒருவரை மட்டுமே செலக்ட் செய்து எங்களுக்கு அனுப்பினார். அப்போது தான் எனக்கு முதன் முதலில் இவர் அறிமுகமானார்” என கூறும் போதே, ஹன்சிகா இந்த விஷயத்தை நம்ப முடியாமல் ஆச்சரியத்தில் ஆழ்ந்தார். அந்த விடியோவை நீங்களும் காண….

Video Courtesy – Ticket box

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்