Categories: சினிமா

இத போய் கட் பண்ணிட்டின்களேடா!!யாருமே பார்க்காத வாணி போஜனுடன் விக்ரம் நடித்துள்ள மகான் படத்தின் தூக்கப்பட்ட காட்சிகள்!!!

வெளியிட்டது

நீண்ட நாட்களாக பெரிய வெற்றிக்காக காத்துக்கொண்டிருந்த நடிங்கர் விக்ரமிற்கு சில படங்கள் அவருடைய நடிப்புக்கு பெயர் வாங்கினாலும் படம் தோல்வியாகவே இருந்தது. இந்நிலையில் விக்ரமும், அவருடைய மகன் துருவ விக்ரம் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் “மஹான்” படம் பிப்ரவரி மாதத்தில் அமேசான் ப்ரேமில் வெளியானது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இத போய் கட் பண்ணிட்டின்களேடா!!யாருமே பார்க்காத வாணி போஜனுடன் விக்ரம் நடித்துள்ள மகான் படத்தின் தூக்கப்பட்ட காட்சிகள்!!! 1

கெங்ஸ்டர் படமான இதில் அப்பா மகனாகவே விக்ரமும் துருவும் நடித்திருந்தனர். படத்தில் சிம்ரன்,பாபி சிம்ஹா என பலரின் நடிப்பில் வெளியான இந்த படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. குறிப்பாக எப்போதும் போல நடிகர் விக்ரம் நடிப்பில் அசத்திருந்தார், இது திரையரங்கில் வெளியாகிருக்க வேண்டிய படம் என பலரும் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக சிம்ரனும்,வாணி போஜனும் நடித்திருந்தனர். ஆனால் வெளியான பதிப்பில் முழுவதுமாக வாணி போஜனின் கதாபாத்திரம் நீக்கப்பட்டது. இது சில ரசிகர்களுக்கு பிடிக்காமல் இருந்தது. மேலும் பலரும் அவர்களுடைய ஜோடி பார்க்க வேண்டும் அந்த விடியோவை கொஞ்ச ரிலீஸ் பண்ணுங்க என தயாரிப்பு நிறுவனத்தை நச்சரித்து வந்தனர்.

இனிநிலையில் கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி வெளியான இந்த படம் இப்பொது 100 நாட்களை கடந்துள்ளது. இதனை கொண்டாடும் வகையில் பட தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் படத்திலிருந்து தூக்கப்பட்ட வாணி போஜனின் காட்சிகளை வெளியிட்டுள்ளார்.

இதில் நடிகர் விக்ரமும் வாணி போஜனின் ஜோடியும் பார்க்கவே அழகாக இருக்கு ரசிகர்கள் இதை என்பா கட் பண்ணீங்க என கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் சில தூக்கப்பட்ட வீடியோக்களையும் தயாரிப்பு நிறுவனம் இப்போது வெளியிட்டு உள்ளது.

Video Courtesy – Amazon prime

 

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்