மஹாவுக்கு முத்தம் கொடுத்த சூர்யா.! விஜய் – காவேரிக்கு இடையே ஏற்படும் நெருக்கம்.! ப்ரோமோ இதோ.!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘ஆஹா கல்யாணம்’ மற்றும் ‘மகாநதி’ ஆகிய சீரியல்களின் மகா சங்கத்தின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் விளையாட்டு ஒன்றில் ஆர்வமாக விளையாடிக் கொண்டிருந்த சூர்யா மற்றும் மகா இருவரும் மிகவும் நெருங்கி வருகின்றனர். அப்போது சூர்யா மகாவுக்கு ஒரு முத்தம் ஒன்றை கொடுத்து விடுகிறார். இதை அங்கிருக்கும் அனைவரும் பார்த்து விடுகின்றனர். அப்போது சூர்யா, “நான் இந்த போட்டியில் இருந்து விலகிக் கொள்கிறேன்” என்று மகாவிடம் கூறுகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மஹாவுக்கு முத்தம் கொடுத்த சூர்யா.! விஜய் - காவேரிக்கு இடையே ஏற்படும் நெருக்கம்.! ப்ரோமோ இதோ.! 1
‘ஆஹா கல்யாணம்’ மற்றும் ‘மகாநதி’ ஆகிய இரு சீரியல்களின் மகா சங்கமம் மிக விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இரு குடும்பத்தினரும் ரிசார்ட் ஒன்றிற்கு வந்திருக்கின்றனர். அங்கு சில போட்டிகள் வைக்கப்படுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு ஐந்து லட்சம் பரிசு தொகை பரிசாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்த பணம் கிடைத்தால் தங்களுடைய பெற்றோர்களின் வறுமையை நீக்கிவிடலாம் என்று சொல்லி மகாவும், காவேரியும் திட்டம் போடுகின்றனர். எனவே இவர்கள் போட்டியில் கலந்து கொண்டிருக்கின்றனர். தற்போது போட்டியில் ஒரு பலூனை நெஞ்சில் வைத்து இருவரும் கீழே விழாமல் பார்த்துக் கொள்ளும்படி கூறப்படுகிறது.


அப்போது தெரியாமல் சூர்யா, மகாவுக்கு முத்தம் கொடுக்கிறார். இதை சூர்யாவின் தாயார் ராஜலட்சுமி மற்றும் சித்தி சித்ராதேவி ஆகியோர் பார்த்து வருகின்றனர். அப்போது மகா, “எனக்கு இந்த போட்டியில் வெற்றி பெறவில்லை என்றால் கூட பரவாயில்லை. நீங்கள் முத்தம் கொடுத்ததே போதும்” என்று கூறுகிறார்.மகாவின் இந்த பேச்சை கேட்ட சூர்யா, “இனி இந்த போட்டியில் தொடர விருப்பம் இல்லை” என்று கூறுகிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்