மகாநதி சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் பலரும் நிவின் மற்றும் காவேரி இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போதைய இருவருக்கும் காதல் முறிவு ஏற்பட்டிருக்கிறது. இந்த முடிவை ரசிகர்கள் பலரும் எதிர்பார்க்கவில்லை. விஜய் தொலைக்காட்சியில் சமீபத்தில் ஒளிபரப்பாகி மக்களுக்கு பிடித்த தொடராக மாறி போயிருக்கிறது மகாநதி. 4 சகோதரிகளின் கதை என்று இந்த கதை ஆரம்பிக்கப்பட்டது. தந்தையை இழந்த நான்கு அக்கா தங்கைகள் எப்படி மீதம் இருக்கும் வாழ்க்கையை நடத்துகிறார்கள். அவர்கள் எப்படி வாழ்க்கையை சமாளிக்கிறார்கள் என்பது குறித்த கதையாக இந்த கதை இருந்து வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கங்கா, காவேரி, யமுனா, நர்மதா என்ற நான்கு சகோதரிகள் இருக்கிறார்கள். இதில் மூத்தவர் கங்காவிற்கு அவரது அத்தை மகன் குமரனுடன் திருமணம் நடைபெற்றது. ஆரம்பத்தில் இந்த திருமணத்திற்கு சம்மதிக்காத கங்கா பின்னர் குமரனை கொஞ்சம் கொஞ்சமாக புரிந்து கொண்டு ஏற்றுக்கொள்ள ஆரம்பித்துள்ளார். இரண்டாவது சகோதரியாக இருக்கும் காவேரிக்கு நிவினுடன் காதல் ஏற்படுகிறது. இருவரும் நெருங்கி பழகி வரும் நிலையில் தற்போது பசுபதியின் மகள் ராகினிக்கும் நிவினுக்கும் நிச்சயதார்த்தம் நடக்க இருக்கிறது. பசுபதி ஏற்கனவே காவேரியின் தந்தையிடம் இருந்து நிலங்களை அபகரித்துக் கொண்டு காவேரி மற்றும் சகோதரிகளை நடுத்தெருவில் விட்டுவிட்டார். இந்த நிலையில் காவேரி காதலித்து வரும் நிவினுக்கு தற்போது தனது மகள் ராகிணியை சம்பந்தம் பேசி இருக்கின்றனர். இது காவேரிக்கு அதீத கோபத்தை கிளப்பி இருக்கிறது.
நிவினிடம் தற்போது கோபமாக சண்டை போடுகிறார் காவேரி. பசுபதி தன்னை காதலித்து ஏமாற்றுமாறு உங்களிடம் சொன்னாரா என்று சொல்லி நிவினிடம் கோபமாக சண்டை போடுகிறார் காவேரி. அதனால் தற்போது காவேரிக்கும் நிவினுக்கும் காதல் முறிவு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் பலரும் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்த்தால் இப்படி இந்த ஜோடிகளை பிரிக்கிறீர்களே என்று சொல்லி கமெண்ட் செய்து வருகின்றனர்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television