ராகினியுடன் மோதிரம் மாற்றி நிச்சயம் செய்த நிவின்.! கதறி அழும் காவேரி.! மகாநதி ப்ரோமோ..!

வெளியிட்டது

மகாநதி சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. காவேரியைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறிவிட்டு ஊரை விட்டு செல்லும் நிவின் திடீரென மாலையும் கழுத்துமாக ராகினியுடன் மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் செய்து கொண்டிருக்கிறார். அந்த ப்ரோமோவை பார்த்த பலரும் தற்போது நிவினை திட்டி தீர்த்து வருகின்றனர். விஜய் தொலைக்காட்சியில் நான்கு சகோதரிகளின் கதை என்கிற தலைப்புடன் ஒளிபரப்பாகி வரும் ஒரு தொடர் தான் மகாநதி. தந்தையை இழந்த நான்கு பெண்கள் தனது வாழ்க்கையில் எவ்வாறு கஷ்டப்படுகிறார்கள் என்றும், அவர்களுக்கு திருமண வாழ்க்கையில் எந்த மாதிரியான துன்பங்களை எதிர்கொள்கிறார்கள் என்பது குறித்த கதையாக இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ராகினியுடன் மோதிரம் மாற்றி நிச்சயம் செய்த நிவின்.! கதறி அழும் காவேரி.! மகாநதி ப்ரோமோ..! 1

 

கங்கா, காவேரி, யமுனா, நர்மதா என்கிற நான்கு சகோதரிகளில் மூத்தவர் கங்கா விற்கும் அவரது அத்தை மகன் குமரனுக்கும் திருமணம் முடிந்திருக்கிறது. இதில் இரண்டாவது தங்கையாக இருக்கும் காவேரிக்கு நிவின் என்பவரிடம் காதல் ஏற்படுகிறது. ஆனால் காவேரியின் மாமனாக இருக்கும் பசுபதி தனது மகள் ராகிணியை நிவினுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகளை நடத்தி வருகிறார். நிவினும் காவேரியும் ஒருவரை ஒருவர் விரும்பி வரும் நிலையில் நிவினை கட்டாயப்படுத்தி இந்த திருமணத்தை செய்து வைக்க முடிவெடுக்கிறார். இந்த நிலையில் இன்று ஒரு ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் காவேரியின் இடம் நான் ஊரைவிட்டு செல்கிறேன் நான் இருந்தால் தானே ராகிணியுடன் எனக்கு நிச்சயதார்த்தம் நடக்கும் என்று சொல்லிவிட்டு நிவின் ஊரை விட்டு கிளம்புகிறார்.

ஆனால் அவர் தற்போது மாலையும் கழுத்துமாக ராகிணியுடன் நிச்சயதார்த்தத்தை மோதிரம் மாற்றி முடித்து இருக்கிறார். இதை குமரன் காவிரியை அழைத்து வந்து காட்டுகிறார். இதனால் மணமுடைந்து போகும் காவேரி கதறி அழுது கொண்டிருக்கிறார். இதன் பின்னர் என்ன நடக்கும் என்பது தெரியவில்லை. நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்