விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘மகாநதி’ சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் தற்போது காவேரியை அழைத்துக் கொண்டு வெளியூருக்கு டூர் செல்லுமாறு விஜயின் தாத்தா அறிவுறுத்துகிறார். இதனால் விஜய் வேண்டா வெறுப்பாக தற்போது காவேரியுடன் கொடைக்கானலுக்கு கிளம்பி செல்ல இருக்கிறார். இதனால் மகிழ்ச்சி தாங்காமல் காவேரி ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானலில் ஒரு கிராமத்தில் தனது நான்கு சகோதரிகளுடன் வசித்து வந்தவர் காவேரி. இவர் தனது தந்தையின் நண்பரால் பணம், சொத்து என அனைத்தும் ஏமாற்றப்பட்டு வேறு ஊருக்கு வருகிறார். அங்கு அவருக்கு விஜய் என்பவருடன் அறிமுகம் ஏற்படுகிறது. விஜய் காவேரியை ஒரு வருட ஒப்பந்தத்தில் திருமணம் செய்து கொள்கிறார். இந்த திருமணத்தில் காவேரியின் குடும்பத்தில் உடன்பாடு இல்லை. இருந்த போதும் விதிவசத்தால் விஜயை திருமணம் செய்து கொள்கிறார். இந்த திருமணத்திற்கு பின்னர் விஜயும் காவேரியும் எலியும் பூனையுமாகவே வாழ்ந்து வருகின்றனர்.
தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் விஜயை பார்த்து காவேரியை அழைத்துக் கொண்டு எங்காவது வெளியே சென்று வருமாறு தாத்தா கூறுகிறார். அப்போது காவேரி நான் கொடைக்கானலுக்கு செல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்று கூற, விஜயிடம் காவேரியை கொடைக்கானலுக்கு அழைத்துச் செல்லுமாறு தாத்தா கூறுகிறார். ஆனால் விஜய் வேண்டா வெறுப்பாக காவேரியை அழைத்துச் செல்ல முயற்சிக்கிறார். இதனால் காவேரி குஷியில் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார். நீங்களும் தற்போது வெளியாகியிருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television