கடிதம் எழுதி வைத்துவிட்டு, வீட்டிலிருந்து வெளியேறிய காவேரி.! தேடி அலையும் விஜய்..!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘மகாநதி’ சீரியலில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் தற்போது கடிதம் எழுதி வைத்துவிட்டு காவேரி வீட்டிலிருந்து வெளியேறி விடுகிறார். அவரை தேடி விஜய் கொடைக்கானலுக்கு அலைந்து திரிந்து கொண்டிருக்கிறார். காவேரி இல்லாமல் வீட்டிற்கு வரக்கூடாது என விஜய்யின் தாத்தா அவருக்கு உத்தரவு போடுகிறார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் விஜய் திணறிக் கொண்டிருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

கடிதம் எழுதி வைத்துவிட்டு, வீட்டிலிருந்து வெளியேறிய காவேரி.! தேடி அலையும் விஜய்..! 1

விஜயின் தம்பி அஜய்க்கு பசுபதியின் மகள் ராகிணியை திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடைபெறுகிறது. ஆனால் விஜயின் மனைவி காவேரிக்கும் பசுபதிக்கும் ஏற்கனவே முன்பகை இருக்கிறது. பசுபதி முன்னர் ஒருமுறை காவேரியை கடத்தி வைத்திருந்த வழக்கில் தற்போது பசுபதி போலீஸாரால் கைது செய்யப்படுகிறார். பசுபதியின் மகள் ராகிணி மற்றும் அஜய் திருமண நிச்சயதார்ந்து கைது நடைபெறுவதால் காவேரி வேண்டுமென்றே இவ்வாறு செய்து விட்டதாக விஜய் அவர் மீது கோபம் கொள்கிறார்.

இந்த நிலையில் விஜயுடன் கோபித்துக் கொண்டு காவேரி வீட்டிலிருந்து வெளியேறி விடுகிறார். அவர் எங்கு சென்றார் என்கிற எந்த தகவலும் இல்லை. இந்த நிலையில் நண்பர் ஒருவர் அவர் கொடைக்கானலுக்குச் சென்றிருக்க வாய்ப்பு இருக்கிறது எனக் கூற விஜய் காரை எடுத்துக்கொண்டு கொடைக்கானலுக்கு தேடி அலைகிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. நீங்களும் அந்த ப்ரோமாவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..! 

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்