விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் தற்போது காவேரி பசுபதியின் முகத்திரையை ஆதாரங்களுடன் கிழித்து எறிந்து இருக்கிறார். இதனால் போலீசார் வந்து பசுபதியை கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர். நிவின் ராகிணி கழுத்தில் தாலி கட்டும் நேரம் பார்த்து இதுபோல் நடந்திருப்பதால் நிவின் ராகிணியின் திருமணமும் நின்று போயிருக்கிறது. காவிரி இதை சாதித்து காட்டியிருக்கிறார். அந்த ப்ரோமோவை தற்போது சீரியல் குழுவினர் வெளியிட்டுள்ளனர். பலரும் இந்த ப்ரோமோவிற்கு வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கங்கா, காவேரி, யமுனா, நர்மதா என்ற நான்கு பெண் பிள்ளைகளின் தந்தையான சந்தானத்தின் சொத்துக்களை ஏமாற்றி வாங்கி விடுகிறார் பசுபதி. தந்தை இறந்த காரணத்தினால் பசுபதியிடம் சொத்துக்களை ஏமாந்து நிற்கும் பெண் பிள்ளைகள் எப்படியாவது அவரிடம் இருந்து இழந்த சொத்துக்களை மீட்க வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இதற்கு எந்த ஆதாரமும் இல்லாமல் இருந்து வருகிறது. இந்த நிலையில் பசுபதியின் உண்மையான முகத்தை நிரூபிக்க காவிரியின் தந்தை சந்தானத்தின் தோட்டக்காரர்களை அழைத்து வருகிறார் காவேரி. இதனால் ஆதாரங்கள் கிடைத்ததால் பசுபதியை கைது செய்து போலீசார் அழைத்து செல்கின்றனர்.
பசுபதி தனது மகள் ராகிணியை காவிரி காதலித்து வரும் நிவினுக்கு திருமணம் செய்து காவிரிக்கு ஆப்பு அடிக்க நினைத்தார். ஆனால் பதிலுக்கு பசுபதியை கைது செய்ய வைத்து காவேரி சிறந்த ஆப்பாக பசுபதிக்கு அடித்திருக்கிறார். அந்த மாஸான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே தொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television