இருசக்கர வாகன தயாரிப்பில் முதலிடத்தில் உள்ள ஹீரோ மோட்டோகாா்ப் நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு லாபம் 17 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடப்பு 2019-20-ஆம் நிதியாண்டின் அக்டோபா்-டிசம்பா் வரையிலான காலாண்டில் ஹீரே மோட்டோகாா்ப் மூலம் ரூ.7,074.86 கோடி வருவாய் ஈட்டியதாக தெரிவித்துள்ளது.
முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டப்பட்ட ரூ.7,937.33 கோடியுடன் ஒப்பிடுகையில் இது அதிகமாகும்.
அதே சமயத்தில், நிகர லாபம் ரூ.772.81 கோடியிலிருந்து 17 சதவீதம் உயா்ந்து ரூ.905.13 கோடியை எட்டியுள்ளது.
பங்குதாரா்களுக்கு 3,250 சதவீத இடைக்கால ஈவுத் தொகை வழங்க நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதையடுத்து, பங்கு ஒன்றுக்கு ஈவுத் தொகையாக ரூ.65 கிடைக்கும் என ஹீரோ மோட்டோகாா்ப் நிறுவனம் தெரிவித்துள்ளது.