Categories: சினிமா

17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பிறந்த மகள்.! குழந்தையின் புகைப்படத்தை காட்டிய நடிகர் பக்ரு.!

வெளியிட்டது

நடிகர் பக்ருவிற்கு 17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மகள் பிறந்திருக்கிறார். அந்த செய்தியை அவரையே தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். முதன்முறையாக தனது ரசிகர்களுக்காக மகளின் முகத்தை காட்டி அவர் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். தமிழ் திரையுலகில் பல கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர் தமிழ் இயக்குனர்கள். ஆரம்பத்தில் பல உயரம் குறைந்த நடிகர்கள் தமிழ் திரையுலகில் காமெடியில் கலக்கி இருக்கிறார்கள். அந்த வரிசையில் உயரம் குறைவாக இருந்த போதிலும் தனது நடிப்பு திறமையால் தமிழ் மக்கள் மனங்களில் இடம் பிடித்தவர் தான் நடிகர் பக்ரு. கேரளாவை சேர்ந்த இவர் ஆரம்பத்தில் மலையாள படங்களில் நடித்து வந்தார். பின்னர் 2006 ஆம் ஆண்டு ஜீவா நடித்த டிஸ்யூம் என்கிற படத்தில் அமிதாப் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனங்களில் இடம் பிடித்தார்.

17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பிறந்த மகள்.! குழந்தையின் புகைப்படத்தை காட்டிய நடிகர் பக்ரு.! 1

அஜய் குமார் என்கிற இயற்பெயர் கொண்ட பக்ரு உயரம் குறைவான நடிகர் என்கிற கேட்டகிரியில் கின்னஸ் ரெக்கார்டு கூட வாங்கி இருக்கிறார். இவரது உயரம் இரண்டு அடி ஆறு இன்ச் மட்டுமே. 76 சென்டிமீட்டர் உயரம் கொண்ட இவர் அத்புத்த தீவ்பு என்கிற மலையாள படத்தில் நடித்தார். பின்னர் இந்த படம் அற்புத தீவு என்று தமிழிலும், தெலுங்கிலும் மொழியாக்கம் செய்யப்பட்டது. மேலும் 2013 ஆம் ஆண்டு பக்ரு “குட்டீம் கொல்லும்” என்கிற படத்தை இயக்கியதன் மூலமாக இயக்குனராகவும் அவதாரம் எடுத்தார். தமிழில் டிஸ்யூம், காவலன், அற்புதத் தீவு, ஏழாம் அறிவு போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் இருக்கிறார். ஆரம்பத்தில் மிமிக்ரி கலைஞராகத்தான் தனது வாழ்க்கையை தொடங்கியிருந்தார் பக்ரு. மங்களம் மிமிக்ஸ் என்கிற மிமிக்ரி குழுவில் இணைந்து தனது வாழ்க்கையை தொடங்கினார். பின்னர் நாதர்ஷா’ஸ் கொச்சின் யூனிவர்சல், கோட்டையம் நசீர் கொச்சின் டிஸ்கவரி போன்ற பல குழுக்களில் இணைந்து மிமிக்ரி கலைஞராக பணியாற்றியிருந்தார். தனது 18 வது வயதில் ஆயிரம் மிமிக்ரி மேடைகளை முடித்திருந்தார் பக்ரு.

1984 ஆம் ஆண்டு வெளியான குழந்தைகள் படமான அம்பி அம்மாவின் என்கிற படத்தில் நடித்திருந்தார். மேலும் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருக்கிறார் பக்ரு. இவருக்கும் காயத்ரி மோகன் என்பவருக்கும் கடந்த 2006 ஆம் ஆண்டு திருமண பிறந்தது. திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு முதல் குழந்தை பிறந்தது. ஆனால் பிறந்த இரண்டு வாரத்திலேயே அந்த குழந்தை இறந்திருந்தது.பின்னர் 2009 ஆம் ஆண்டு அவருக்கு மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அவருக்கு தீப்தி கீர்த்தி என்று பெயர் வைத்திருக்கிறார் பக்ரு. தனது மகள் குறித்து பேசிய பொழுது, அவர் சிறு வயதில் தன்னை அண்ணன் என்று நினைத்துக் கொண்டிருந்தார். சிறுவயதில் எனக்கு சைக்கிள், வண்டி ஓட்ட ஆசை இருக்கும். ஆனால் அப்போதெல்லாம் எனக்கு டிரைவராக இருந்து என் நண்பர்கள் என் ஆசையை நிறைவேற்றி வைத்தார்கள். இப்போது என் மகள் தான் எனக்கு டிரைவராக இருக்கிறார். எனக்கு வந்த குறை என் மகளுக்கு இல்லை. அதற்காக கடவுளுக்கு நன்றி சொல்கிறேன் என்று உருக்கத்துடன் பேசி இருந்தார்.

பக்ருவின் மூத்த மகள் 14 வயதை எட்டியிருக்கும் நிலையில் மீண்டும் பக்ருவிற்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்திருக்கிறது. திருமணம் முடிந்து 17 ஆண்டுகள் கழித்து மீண்டும் பெண் குழந்தைக்கு அப்பாவாக இருக்கிறார் நடிகர் பக்ரு. இவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். மேலும் தனது இரண்டாவது மகளின் புகைப்படத்தை ரசிகர்களுக்காக முதன்முறையாக பதிவிட்டு இருக்கிறார். மகளை கையில் ஏந்தி இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்த அவர், தனக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதாகவும் மருத்துவருக்கும் மருத்துவமனைக்கும் மிக்க நன்றி என்றும் அந்த புகைப்படங்களை பகிர்ந்து இருந்தார். இந்ம நிலையில் மீண்டும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து இருக்கும் பக்ரு தனது மனைவி, மூத்த மகள், இரண்டாவது குழந்தை என குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். மேலும் தனது மகளுக்கு “த்விஜா கீர்த்தி” என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியிருக்கிறார். இந்த புகைப்படங்களுக்கு தற்போது லைக்குகள் குவிந்து வருகிறது. பலரும் பக்ருவிற்கு வாழ்த்துகளையும் கூறி வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்