“பிறந்தநாள் அன்று தேசிய விருது நல்ல பரிசு”!!”சூர்யாவை பாராட்டிய மாமூட்டி”!!

வெளியிட்டது

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக வந்தாலும், இன்று தனக்கென மிக பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளவர் நடிகர் சூர்யா. சிவகுமாரின் மகனான இவர் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான “நேருக்கு நேர்” திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் சில காலம் வெற்றிக்காக காத்திருந்த இவருக்கு பாலாவின் “நந்தா” படம் மிக பெரிய அளவில் காய் கொடுத்தது. அதற்கு முன் சில காமெடி , காதல் படங்கள் நடித்து இருந்தாலும் மக்கள் இவரை நந்தா படத்தின் மூலம் தான் ஒரு தனி நாயகனாக ஏற்று கொண்டனர். பின்னர் ஆறு, வேல், கஜினி, வாரணம் ஆயிரம், காக்க காக்க, ஜில்லுனு ஒரு காதல், சிங்கம் என வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

"பிறந்தநாள் அன்று தேசிய விருது நல்ல பரிசு"!!"சூர்யாவை பாராட்டிய மாமூட்டி"!! 1

இதனை அடுத்து எடுக்கப்பட்ட “ஜெய் பீம்” படம். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக சந்துரு என்ற ஒரு வழக்கறிஞரின் வழகியை அடிப்படையாக கொண்டு உருவான இந்த படம் வரவேற்பையும், சர்ச்சைகளையும் சேர்ந்தே பெற்றது. மிக பெரிய அளவில் மக்களால் கொண்டாடப்பட்ட இந்த படம், அரசியல் சர்ச்சைகள் பலவற்றை பெற்ற போதிலும், படம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த படமும் ஆஸ்கார் நாமினேஷனுக்கு இந்திய சார்பில் சமர்ப்பிக்கப்பட்டது.

கடைசியில் தேர்வாகாமல் போனாலும் படத்தை பார்த்த நடுவர்கள் கூட படத்தை பாராட்டி வாழ்த்துக்களை வெளியிட்டனர். இது சூரியாவிற்கும், படக்குழுவிற்கும் மிக பெரிய மரியாதையை கொடுத்தது. இந்த ஆண்டு நடைபெறவுள்ள “95வது ஆஸ்கார் விருதுகள்” அமைப்பின் சார்பில் ஆஸ்கார் அமைப்பின் உறுப்பினராக, அந்த அமைப்பு சார்பில் சூர்யாவுக்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி இப்பொது வெளியாகி மிக பெரிய அளவில் பகிரப்படுவதுடன் நடிகர் சூர்யாவிற்கு பாராட்டுகளும் குவிந்து வருகின்றன. இந்த பட்டியலில் மற்றொரு இந்திய நடிகை கஜோலும் உள்ளார்.

இந்த பெரிய அதிகாரத்திற்கு மேல் தற்போது மிக பெரிய விருதை வென்று மிக பெரிய கவுரவத்தை பெற்றுளளர் சூரியா. நடிகர் சூர்யாவின் சூரரை போற்று படம் கொரோன காலகட்டத்தால் OTT தளத்தில் வெளியானாலும் மாபெரும் வெற்றியை பெற்றது. சூர்யா, அபர்ணா பாலமுரளி, கருணாஸ், ஊர்வசி, “பூ” ராமு முதலனோர் இந்த படத்தில் நடித்து இருந்தனர். சுதா கொங்கரா இயக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து இருந்தார். ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாள, ஹிந்தி மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

படத்திற்கு சிறந்த பின்னணி இசை அமைத்தற்காக ஜி.வி.பிரகாஷ் குமார், சிறந்த திரைக்கதை அமைத்தற்காக ஷாலினி உஷாதேவி மற்றும் சுதா கொங்கரா வென்றுள்ளனர். மேலும் யோகிபாபு  நடிப்பில் வெளியான “மண்டேலா” படமும் சிறந்த திரைக்கதைக்கான விருதைத் வென்றுள்ளது. இந்த படத்தை இயக்கிய மடோன்னே அஸ்வின் இந்த விருதை பெற்றுள்ளார்.

அதே போல இன்று நடிகர் சூர்யாவின் 47வது பிறந்தநாளாகவும் இருக்கிறது. நேற்று தேசிய விருது இன்று பிறந்தநாள் கொண்டாடுவதால் பல்வேறு தரப்பனாரும் இவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். ரசிகர்ளும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் மலையாள முன்னணி நடிகரும், மிக முக்கிய இந்திய நடிகருமான நடிகர் மாமூட்டி வாழ்த்து கூறியுள்ளார். பிறந்தநாள் அன்று தேசிய விருது மிக பெரிய பரிசு என கூறி அவரும் சூர்யாவும் இருக்கும் புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்