தமிழ் சினிமாவில் உச்சநடிகராக இருப்பவர் ரஜினிகாந்த். இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. அண்மையில் இவருக்கு வெளியான ஜெயிலர் படம் மாபெரும் வசூலை வாரி குவித்தது. தற்போது நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து உள்ளார். இப்படத்தில் இவருடன் அமிதாப்பச்சன்,பகத் பாசில், அபிராமி , தூஸ்ரா விஜயன் ஆகியோர் நடித்து உள்ளனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். இயக்குனர் ஞானவேல் இயக்கிய ஜெய் பீம் படம் மாபெரும் வெற்றிபெற்ற நிலையில், சூப்பர் ஸ்டாரின் வேட்டையன் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. தற்போது இப்படம் வருகிற அக்டொபர் மாதம் பத்தாம் தேதி வெளியாக இருப்பதாக அறிவித்து உள்ளது. இதனால் ரசிகர்கள் பெரும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடலான மனசிலாயோ பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளது படக்குழு. இந்த பாடலை AI உதவியுடன் மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவன் குரலில் உருவாக்கி உள்ளனர். தற்போது இப்பாடலின் ப்ரோமோவை படகுழு வெளியிட்டு உள்ளது. பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது.
Embed Video Credits : SONY MUSIC