Categories: அரசியல்

மங்களூர் துப்பாக்கி சூடு: நீதிசார்ந்த விசாரணை தேவை

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது மங்களூரில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு குறித்து சட்டப்படியான விசாரணை தேவை என மக்கள் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் 19ஆம் தேதி அன்று குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மங்களூரில் போராட்டம் நடைபெற்றது.

மங்களூர் துப்பாக்கி சூடு: நீதிசார்ந்த விசாரணை தேவை 1
மங்களூர் துப்பாக்கி சூடு

இப்போராட்டத்தில் வன்முறையை ஏற்படவே காவல்துறை தடியடி கொண்டு போராட்டக்காரர்கள் மீது அடக்குமுறையை ஏவியது. இதனால் இருதரப்புக்கும் இடையே பெரும் மோதல் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து மங்களூர் காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் இரண்டு போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட அனைத்து நபர்களை கொண்டு பொது விசாரணையை ஓய்வுபெற்ற நீதிபதி கோபால கவுடா, பி.டி.வெங்கடேஷ் மற்றும் சுகதா சீனிவாசராஜு ஆகியோரை அடங்கிய மக்கள் தீர்ப்பாயம் அறிக்கை வெளியிட்டது.

அதில், இந்த நேரத்தில் ஊரடங்கு உத்தரவுகளை விதிப்பது தேவையற்றது என்றும், டிசம்பர் 18 மாலை திணிக்கப்பட்ட உத்தரவு குறித்து அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு திறம்பட தெரிவிக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளது.

மேலும், விசாரணை நடத்தப்பட்டவர்கள் ஆணையத்திடம் கூறுகையில், இனவாதம் குறித்தான இழிமொழிகளையும், கலவரம் ஏற்படும் வண்ணம் சொற்களை காவல்துறையினர் பயன்படுத்தினார்கள் என்றும், தடியடி மற்றும் துப்பாக்கி சூடு குறித்து முறையான தகவலும் போராட்டக்காரர்களுக்கு அறிவிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

எனவே, இந்த சம்பவம் குறித்து முறையான விசாரணை தேவை என மக்கள் தீர்ப்பாயம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்