இப்போதைய திரைஉலகில் நாயகர், நாயகிகள் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என ஒரு குறிப்பிட்ட அளவுகோள் வைத்திருக்கிறார்கள். பார்ப்பதற்கு வெள்ளையாக, கட்டுக்கோப்பான உடலுடன் இருக்க வேண்டும் என கூறப்பட்டுவருகிறது. இதனை முறியடித்து ரஜினி, விஜயகாந்த், விஜய் சேதுபதி என பலர் இருந்தாலும் அதுதான் தேவைப்படுகிற ஒன்று என பலரையும் தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. இது பெருமபாலும் பெரிய தலை வெளியாவது நாயகிகளுக்கே.

நடிகர் நிவின் பாலி நடிப்பில் மலையாளத்தில் வெளியான “ஒரு வடக்கன் செல்பி” படம் மூலம் திரையுலகில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை மஞ்சிமா மோகன். இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் சிம்புவுடன் இரண்டாவது முறை இனைந்து பணியாற்றிய “அச்சம் என்பது மடமையடா” படம் மூலம் இவரை தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் அறிமுகம் செய்யப்பட்டார்.
முதல் படமே நல்ல வெற்றி என்பதால் அடுத்தடுத்து நடிகர் விக்ரம் பிரபு, உதயநிதி, ஜீவா, கவுதம் கார்த்திக், மீண்டும் ஒரு நிவின் பாலியின் படம் என அடுத்தடுத்த படங்களில் நடித்தார், ஆனால் எந்த படமும் பெரிய வெற்றியையோ, இல்லை எதிர்பார்த்த நல்ல பெயரையோ வாங்கி கொடுக்கவில்லை. அண்மையில் இவர் நடிப்பில் விஷ்ணு விஷால் நாயகனாக நடித்து இருந்த ‘எஃப்.ஐ.ஆர்” படம் நல்ல வரவேற்பை இவருக்கும் படைத்திருக்கும் கொடுத்தது.
ஆனால் உடல் எடை கூடிய காரணத்தால் நிறைய கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானார் மஞ்சிமா. பலவேறு வகையிலான நேரடி மற்றும் மறைமுக கேலிகள் இவரை குறிவைத்து இணையதளத்தில் வலம்வந்தன. இப்பொது அதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் படி தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கியுள்ளார் மஞ்சிமா. அந்த விடியோக்களை சோசியல் மீடியா தளங்களில் வைரலாகி வருகின்றன.
Video Courtsy – Wow Tamizhaa