வீட்டை விட்டு வெளியேறினார் மணிகண்டன்.! இந்த வாரம் நடந்த பரபரப்பான எலிமினேஷன்.!

வெளியிட்டது

பிக்பாஸ் வீட்டிலிருந்து மணிகண்டன் வெளியேறி இருக்கிறார் என்ற செய்தி தற்போது கிடைத்து இருக்கிறது. பிக்பாஸ் தொடங்கி சுமார் 80 நாட்களை கடந்து விட்டது. மீதம் 20 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இன்றுவரை 9 நபர்கள் பிக்பாஸ் வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். 3 வாரங்கள் மீதமுள்ள நிலையில் அடுத்தடுத்து  போட்டியாளர்களை வெளியேற்றிவிட்டு மீதம் இருக்கும் ஐந்து நபர்களை டாப் 5-ல் வைக்க பிக்பாஸ் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அந்த வகையில் தற்போது 13வது நபராக மணிகண்டனை பிக்பாஸ் வெளியேற்றியுள்ள செய்தி தற்போது கிடைத்துள்ளது. நமது இணையதளத்தில் எடுத்த அதிகாரப்பூர்வமற்ற வாக்கெடுப்பிலும் அவரே பின்தங்கி இருக்கிறார். இன்று 13வது நபராக வீட்டில் இருந்து மணிகண்டன் வெளியேறி இருக்கிறார். கடைசி வாரம் நடந்த குடும்ப டாஸ்கில் அவரது மனைவி, தங்கை, மகன், அம்மா என எல்லாரும் வந்த நிலையில் இந்த வாரம் அவரை வெளியேற்றி இருக்கின்றனர்.

வீட்டை விட்டு வெளியேறினார் மணிகண்டன்.! இந்த வாரம் நடந்த பரபரப்பான எலிமினேஷன்.! 1
அக்டோபர் ஒன்பதாம் தேதி கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் சீசன் சிக்ஸ் நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இப்போது வரை மொத்தம் 12 போட்டியாளர்கள் வெளியேறி இருக்கின்றனர். ஜி.பி முத்து, சாந்தி மாஸ்டர், அசல் கோளாறு, ஷெரினா, VJ மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி, ஆயிஷா, ராம், ஜனனி, தனலெட்சுமி என்று மொத்தம் 12 போட்டியாளர்கள் வெளியேறி விட்டனர். இந்த நிலையில் இந்த வாரம் அசீம், விக்ரமன், மணிகண்டன், ஏடிகே, மைனா, கதிரவன், அமுதவாணன் என மொத்தம் ஏழு போட்டியாளர்கள் நாமினேஷனில் இருந்து வந்தனர். இதில் அசீம் மற்றும் விக்ரமன் முதல் இரண்டு இடங்களை பிடிக்க ஏடிகே & மணிகண்டன் கடைசி இடத்தை பிடித்திருக்கின்றனர். பிக்பாஸ் வீட்டிலிருந்து மணிகண்டன் வெளியேறி இருக்கிறார் என்ற செய்தி தற்போது கிடைத்து இருக்கிறது.


மணிகண்டன் பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இன் சொந்த அண்ணன் ஆவார். இவர் சில நாடகங்களிலும் நடித்திருக்கிறார். மேலும் சில ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கு எடுத்திருக்கிறார். முதன்முறையாக சன் டிவியில் ஒளிபரப்பான அவள் என்கிற நாடகத்தில் அவர் நடித்தார். பின்னர் 2015 ஆம் ஆண்டு ஒளிபரப்பான அழகு என்கிற சீரியலில் நடித்தார். பின்னர் 2018 ஆம் ஆண்டு கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான வேலுநாச்சி என்கிற சீரியலிலும் அவர் நடித்திருக்கிறார். மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸஸ் திரையில் சின்னத்திரை நிகழ்ச்சியில் தனது மனைவியுடன் பங்கெடுத்திருக்கிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் நேற்று வெளியான டிரைவர் ஜமுனா படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் மணிகண்டன். பிக்பாஸ் வரலாற்றிலேயே 4 முறை கேப்டன் ஆகவும் வந்து சாதனை படைத்து இருந்தார். உடல் வலிமையை கொண்டு விளையாடும் அனைத்து டாஸ்க்கிலும் அவர் திறமையாக விளையாடி இருக்கிறார். இந்த நிலையில் அவர் வெளியேறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்