பிக்பாஸில் இருந்து கடந்த வாரம் வெளியேறிய மணிகண்டன் தற்போது தனது முதல் பதிவை சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து இருக்கிறார். பிக்பாஸ் சீசன் 6 தொடங்கி சுமார் 85 நாட்களில் நிறைவடைந்துள்ளது. இந்த வாரம் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் நடந்து வருகிறது. இந்த வாரம் ஜெயிப்பவர்கள் நேரடியாக பைனல்சுக்கு செல்ல தகுதியானவர்களாக கருதப்படுவார்கள். இதில் போட்டியாளர்கள் கடுமையாக விளையாடி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த வாரம் வீட்டில் இருந்து வெளியேறிய மணிகண்டன் தற்போது தனது சோசியல் மீடியா பக்கத்தில் உருக்கமான கடிதம் ஒன்றை தனது ரசிகர்களுக்கு எழுதி நன்றி தெரிவித்திருக்கிறார். பிக்பாஸில் கலந்து கொண்டு வலிமையான போட்டியாளர்களில் ஒருவராக வலம் வந்தவர் தான் மணிகண்டன். இவர் கடந்த வாரம் நாமினேஷனில் குறைந்த வாக்குகள் பெற்று வீட்டை விட்டு வெளியேறி இருந்தார்.

மணிகண்டன் ராஜேஷ், ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் ஆவார். இவர் பிக்பாஸ் சீசன் சிக்ஸில் கலந்து கொண்டு இதுவரை யாரும் செய்யாத சாதனையாக நான்கு முறை கேப்டனாக இருந்தார். Freez Task வரை உள்ளே இருந்த அவர் தனது மனைவி மகன் அம்மா தங்கை என அனைவரையும் பார்த்துவிட்டு கடந்த வாரத்துடன் வீட்டிலிருந்து வெளியேறினார். மணிகண்டன் கடைசியாக தனது தங்கையுடன் இணைந்து டிரைவர் ஜமுனா என்ற படத்தில் நடித்திருக்கிறார். அதற்கு முன்பாக அவர் சில நாடகங்களிலும் ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கெடுத்து இருக்கிறார் சன் டிவியில் ஒளிபரப்பான அழகு என்ற நாடகத்திலும், கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பான வேலுநாச்சி என்ற நாடகத்திலும் அவர் நடித்திருக்கிறார். மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை என்ற நிகழ்ச்சியிலும் மணிகண்டன் நடித்திருக்கிறார். இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பின்னர் அவர் முதல் முறையாக பதிவு ஒன்றே போட்டு இருக்கிறார்.
அதில் அவர் பிக்பாஸ் உடனான இந்த பயணம் மறக்க முடியாதது மற்றும் எனது நினைவில் என்றும் இருக்கக்கூடியதாக இருக்கும். என்னுடைய மற்ற ஹவுஸ் மேட்ஸ்க்கு நான் இந்த தருணத்தில் நன்றி சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ஏனெனில் அவர்களுடன் இருந்த காலத்தில் நான் நிறைய கற்றுக் கொண்டேன். இந்த நாட்களில் அவர்களுடன் நான் மிகவும் ஜாலியாகவும் இருந்திருக்கிறேன். மேலும் எனக்கு வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவத்தை கொடுத்த பிக்பாஸ் குழு, ஸ்டார் விஜய், உலக நாயகன் கமலஹாசன் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். மேலும் கடைசியாக எனது அனைத்து ரசிகர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
என் மீது விலைமதிப்பற்ற அன்பும் நம்பிக்கையும் வைத்திருந்தனர். இந்த இரண்டையும் அவர்கள் என் மீது வெளிப்படுத்திக் கொண்டே இருக்கின்றனர். அவர்களின் அசைக்க முடியாத இந்த ஆதரவு எனக்கு மிகவும் ஊக்கம் அளித்து இருக்கிறதுழ என்னால் முடிந்ததை செய்து அதிக உயரத்தை அடைய முயற்சி செய்கிறேன் என்று பதிவிட்டு இருக்கிறார். அவரின் இந்த பதிவிற்கு கீழே மக்கள் நேரடியாக பைனலுக்கு செல்லும் தகுதியான போட்டியாளர்களில் ஒருவர் நீங்கள், வெளியேறியது எங்களால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. மேலும் விக்ரமனை நீங்கள் தனிப்பட்ட தாக்குதலில் ஈடுபட்டது தான் நீங்கள் வெளியேறியதற்கு காரணம் என்னும் கமெண்ட்களில் தெரிவித்து வருகின்றனர்.