இணையத்தில் மணிமேகலை மற்றும் பிரியங்கா விவகாரம் பூதாகரமாக வெடித்து இருக்கிறது. பலரும் மணிமேகலைக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், விஜய் டிவி பிரபலங்கள் அனைவரும் ப்ரியங்காவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதனால் இது ப்ரியங்காவின் நாடகம் எனவும், அனைவரையும் மிரட்டி மணிமேகலைக்கு எதிராக திருப்பி இருப்பதாகவும் ரசிகர்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

தற்போது குரேஷி முதல், பரீனா , சுனிதா என பலரும் மணிமேகலைக்கு எதிராக திரும்பி உள்ளனர். மேலும் ப்ரியங்காவின் நண்பர்களான அமீர் மற்றும் பாவனி தங்களது ஆதரவுகளை ப்ரியங்காவுக்கு தெரிவித்து வருகின்றனர். விஜய் டிவி பிரபலங்கள் யாரும் மணிமேகலைக்கு ஆதரவாக பேசாதது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் அனைவர்க்கும் மணிமேகலை பதிலடி கொடுத்து உள்ளார்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தலை வணங்குவது கடவுளுக்கு மட்டுமே என கூறி தன்னை விமர்சிப்பவர்களுக்கு பதிலடியை கொடுத்து இருக்கிறார் மணிமேகலை. இவரின் இந்த பதிவு ரசிகர்களிடம் பலத்த வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது,