விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சிக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்களாக உள்ளனர். இதுவரை நான்கு சீசன்கள் முடிந்து ஐந்து சீசன் தொடங்கி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடருக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளதால் தொடர்ச்சியாக ஆதரவுகளை இந்த நிகழ்ச்சிக்கு அளித்து வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளரா பணியாற்றி வருபவர் மணிமேகலை. தற்போது இவர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருப்பதாக தெரிவித்து உள்ளார். இது ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக வந்து இருக்கும் பெண் தொகுப்பாளினி தன்னை வேலை செய்யவிடாமல் தடுப்பதாகவும், தனது தொகுப்பாளினி வேலைகளில் தலையிடுவதாகவும் கூறியுள்ளார். அனைவரின் மீதும் ஆதிக்கம் செலுத்துவதாகவும் , இதுகுறித்து தயாரிப்பு நிறுவனத்திடம் புகார் அளித்தால், ப்ரியங்காவிடம் பணிந்து போக வேண்டும் என கூறியதாக தெரிவித்து உள்ளார்.
மேலும் இதுபோன்ற மோசமான தயாரிப்பு நிறுவனத்தை பார்த்தது இல்லை எனவும்,கூறி உள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியில் நான் பங்குபெற மாட்டேன் என கூறி உள்ளார். பிரியங்கா மீது மணிமேகலை பழி சுமத்தி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் மணிமேகலை ரசிகர்கள் கண்டபடி பிரியங்காவை விமர்சனம் செய்து வருகின்றனர்.