தமிழ் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் கூல் சுரேஷ். பின்னர் சந்தானத்துடன் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து கலக்கினார். பின்னர் வெள்ளிக்கிழமை திரையரங்குகளுக்கு வந்து படங்களை பார்த்து விமர்சனம் செய்து வந்தார். இப்படியே பிரபலமாகிய இவர்,பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றார்.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு சினிமாவில் வாய்ப்பு தேடிய இவருக்கு, இயக்குனர் செல்அம் இயக்கத்தில் TTF வாசன் நடிக்க இருந்து பின்னர் கைவிடப்பட்ட படம் மஞ்சள் வீரன். இப்படத்தில் இவர் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அண்மையில் இப்படத்தின் பூஜை நடைபெற்று இருந்தது. தற்போது இப்படத்தின் முதல்பார்வை போஸ்டரை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு உள்ளார் கூல் சுரேஷ்.
இந்த புகைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. ரசிகர்கள் கூல் சுரேஷுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.