Categories: சினிமா

மஞ்சள் வீரன் படத்தின் நாயகனாக மாறிய COOL சுரேஷ்..! வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு..! TTF ரசிகர்கள் அதிர்ச்சி..!

வெளியிட்டது

பிரபல யுடியூபர் TTF வாசன் கதாநாயகனாக அறிமுகமாக இருந்த முதல் படம் மஞ்சள் வீரன். இப்படத்தினை இயக்குனர் செல்அம் இயக்க இருந்தார். இப்படத்திற்கான முதல் பார்வை போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருந்தது. மேலும் படத்தின் பூஜையும் பிரம்மாண்டமாக நடைபெற்று இருந்தது. இருப்பினும் பல நாட்கள் ஆகியும் தற்போதுவரை படப்பிடிப்பு நடத்தப்படாமல் இருந்தது.

மஞ்சள் வீரன் படத்தின் நாயகனாக மாறிய COOL சுரேஷ்..! வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு..! TTF ரசிகர்கள் அதிர்ச்சி..! 1

இந்நிலையில் திடீரென சில தினங்களுக்கு முன்பு டிடிஎப் வாசன் இப்படத்தில் இருந்து நீக்கப்பட்டதாக இயக்குனர் அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தார். இது ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தி இருந்தது. மேலும் இதுகுறித்து வாசனிடம் எந்த அறிவிப்பும் இல்லாமல் , இயக்குனர் மீடியாவின் முன்பு தனது பெயருக்கும் களங்கம் விளைவித்து இருப்பதாக கூறினார்.

தற்போது இயக்குனர் செல்அம் மற்றும் வாசன் இடையே மோதல் ஆரம்பித்து உள்ளது. தற்போது இப்படத்தின் நாயகனாக கூல் சுரேஷ் ஒப்பந்தமாகி இருக்கிறார். படத்தின் பூஜை புகைப்படங்கள் தற்போது வெளியாகி ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.

வெளியிட்டது

புதிய செய்திகள்