‘அசுரன்’ திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை மஞ்சு வாரியர். அவரது சிறந்த நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் பெரும் புகழை அடைந்துள்ளார். நாகர்கோயிலில் பிறந்த மஞ்சு வாரியர் ‘சக்சஷ்யம்’ என்னும் மலையாளத் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரைத் துறையில் அறிமுகமானார். பின்னர் மலையாளத்தில் பல வெற்றிப் படங்களை அளித்து மிகவும் பிரபலமானார். மிகச்சிறந்த நடிகையாக வலம் வரும் மஞ்சுவை கேரளாவின் “லேடி சூப்பர் ஸ்டார்”

என்று மக்களாலும் திரைத் துறையினராலும் கூறப்படுகிறார். மலையாளத் திரைத் துறையில் மற்றொரு பிரபலமான நடிகர் திலீப். இவரும் மஞ்சு வாரியரரும் காதிலித்து 1998 இல் திருமணம் செய்து கொண்டனர். இருவருக்கும் ‘மீனாட்சி’ என்ற மகள் இருக்கிறார். ஆனால் அவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பரஸ்பரமாக விவாகரத்து செய்து கொண்டார்கள்.
தற்போது அவர்களின் மகள் தீலிப் மற்றும் அவருடைய வாழ்க்கைத் துணையான காவ்யா மாதவன் உடன் வசித்து வருகிறார். சமீபத்தில் மீனாட்சியின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளன. இதைப் பார்த்த மக்கள் அவரை “குட்டி மஞ்சு வாரியர்” என்று கூறி வருகின்றனர். மேலும் ரசிகர்கள் மஞ்சு வாரியாருக்கு இவ்வளவு பெரிய மகளா என்று ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.