Categories: சினிமா

“இவரெல்லாம் தலைவரா வெச்சிட்டு எப்படி வண்டி ஓட்டுறதுனே தெரியல”!! நாசரை பங்கம் பண்ணிய மனோபாலா”!!

வெளியிட்டது

நடிகர் மனோபாலா. காமெடி நடிகராகவே நமக்கு பெரும்பாலும் அறிமுகமான இவர் அதனை தாண்டி இயக்குனராக, தயாரிப்பாளராக வெற்றி கண்டவர். 1979ஆம் ஆண்டு நடிகர் கமல் தந்த அறிமுகம் மூலம், பாரதிராஜாவின் புதிய வார்ப்புகள் படத்தில் அவருக்கு துணை இயக்குனராக திரையுலகில் அறிமுகமானார். நிறைய படங்கள் பாரதிராஜாவுடன் துணை இயக்குனராக பணிபுரிந்த இவர், பின் 1982இல் நடிகர் கார்த்தி, சுஹாசினி நடிப்பில் வெளியான “ஆகாய கங்கை” படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

"இவரெல்லாம் தலைவரா வெச்சிட்டு எப்படி வண்டி ஓட்டுறதுனே தெரியல"!! நாசரை பங்கம் பண்ணிய மனோபாலா"!! 1

பின்னர் தொடர்ந்து மைக் மோகனுடன் “பிள்ளை நிலா”, விஜயகாந்துடன் “என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்”, ரஜினியுடன் “ஊர்காவலன்”, சத்யராஜுடன் “மல்லு வேட்டி மைனர்” சிவாஜியுடன் “பாரம்பரியம்” போன்ற படங்களை இயக்கியுள்ளார். நடிகராக ஆரம்பம் முதலே நடித்து வந்த இவர், தமிழில் கிட்டத்தட்ட 150 படங்களுக்கு மேல் துணை நடிகராகவும் நடித்து பிரபலாமாகவுள்ளார்.

இயக்குனர் ஹெச்.வினோத் அறிமுகமான முதல் படம் “சதுரங்க வேட்டை” இவர் தயாரிப்பில் வெளியானது குறிப்பிடதக்கது. ஓரிரு கன்னட, ஹிந்தி படங்களையும் இயக்கியுள்ளார். இன்றளவும் தமிழ் சினிமாவில் சிறந்த துணை நடிகராக இருக்கும் இவர் நேற்று நடிகர் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள “லத்தி சார்ஜ்” படத்தின் டீஸர் வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டு பேசினார்.

முதலில் பேசத்தயங்கிய இவர் நாசர் “மைக்கே இவர பேச சொல்லுது’னு” கலாய்க்க, “இவரெல்லாம் தலைவரா வெச்சிட்டு என பண்றதுனே தெரியல” என நாசரை கலாய்த்துவிட்டு பின்னர் பேசினார். படத்தை தயாரித்துள்ள ராணா மற்றும் நந்தாவிற்கு பாராட்டுகளை தெரிவித்து விட்டு,”படம் மிக பெரிய வெற்றியை பதிவு செய்யும்” என கூறி விடைபெற்றார். இவரின் இந்த பேச்சு இப்பொது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ராணா மற்றும் நந்தா இருவரும் இணைந்து தயாரிக்க, விஷால், சுனைனா நடிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் வினோத் குமார் இயற்றியுள்ளார். இது ஐந்து மொழிகளில் பான் இந்தியத் திரைப்படமாக உருவாகிறது. மேலும் இது விஷாலின் முதல் பான் இந்திய திரைப்படமாகும். லத்தி படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் தீபாவளிக்கு படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Video Courtesy – Indiaglitz

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்