“அண்ணே கொஞ்சம் இருண்ணே…..பேசவிடாமல் தடுத்த மன்சூர்….அலப்பறையை கூட்டிய சுரேஷ்”

வெளியிட்டது

சினிமாவில் நிறைய நடிகர்கள் நடித்தாலும், காலப்போக்கில் ஒருசிலர் மட்டுமே மக்களுக்கு ஞாபகம் இருக்கும் படி இருப்பார்கள். 1970-80களில் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி இருவரையும் தாண்டி ஜெமினி கணேசன், முத்துராமன், ஜெய் ஷங்கர், எம்.ஆர்.ராதா, ரவிச்சந்திரன் என பல நாயகர்கள் இருந்தும் நமக்கு இப்போது அதிகம் ஞாபகம் இருப்பது ஒரு சிலர் மட்டுமே. அது காலப்போக்கில் சாதாரணமாக நடக்க கூடிய விஷயங்களே. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"அண்ணே கொஞ்சம் இருண்ணே.....பேசவிடாமல் தடுத்த மன்சூர்....அலப்பறையை கூட்டிய சுரேஷ்" 1

அந்த வகையில் 1990களில் மிகவும் பிரபலமான வில்லனாக இருந்தவர் நடிகர் மன்சூர் அலி கான். இயக்குனர் செல்வமணி இயக்கிய விஜயகாந்தின் “கேப்டன் பிரபாகரன்” படத்தின் மூலம் மிக பெரிய அளவில் மக்களிடம் வரவேற்பை பெற்றார். முதல் படம் இது இல்லை என்றாலும், இவருக்கு மக்களிடம் அறிமுகம் கொடுத்த படம் இதுவே. இவர் அந்த படத்தில் அப்போது பிரபலமாக இருந்த வீரப்பன் கதாபாத்திரத்தில், “வீரபத்திரன்” ஆகா படத்தில் தோன்றி படம் பார்த்த ரசிகர்களை மிரட்டினார்.

பின்னர் தொடர்நது ஆக்ஷன் படங்களில் வில்லன் என்றால் அது நடிகர் மன்சூர் அலி கானே என்று கூறுமளவில் வெளிவந்த முக்கால்வாசி படங்களை கொடூர வில்லனாக தோன்றி மக்களை மிரட்டியெடுத்தார். விஜயகாந்தின் படங்களில் பெரும்பாலும் இவரே வில்லன். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,  மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழி படங்களில் பெரும்பாலும் வில்லனாக நடித்து வந்தார்.

முன்னையில் இருந்த அப்போதைய நடிகர்கள் பலருக்கும் முக்கிய வில்லன் நடிகர் என்றால் அது இவரே. ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் வில்லன் என்றால் அது நம்பியார் கொடிகட்டி பறந்ததை போல, அவரை போலவே நடிகர் மன்சூர் அலி கானும் கொடிகட்டி பறந்தார். மெல்ல வில்லன் நடிகர் என்பதிலிருந்து சில படங்களில் நாயகனாக நடிக்க துவங்கினார்.

அதிலும் சில காலங்களில் வெற்றியை பெற்ற இவர், 2000ஆம் ஆண்டு துவக்கங்களில் கொஞ்சம் கொஞ்சமாக படங்களில் வாய்ப்பு துவங்கி, பின்னர் 2010ஆம் ஆண்டுகளில் சில சில படங்களில் சிறு சிறு பாத்திரங்களில் நடிக்க துவங்கினார். அறிமுகமான முதலே அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார் மன்சூர் அலி கான்.

இவரின் புகழ் இப்பொது மற்றொரு உச்சத்தை அடைந்துள்ளது. இப்போதைய மிகவும் கவனம் பெற்றுள்ள இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இவர் மிக பெரிய ரசிகராக தன்னை அறிவித்து வருகிறார். குறிப்பாக கார்த்தி நடிப்பில் லோகேஷ் இயக்கிய “கைதி” படத்தில் லோகேஷ் முதலில் நாயகனாக நினைத்தது மன்சூர் அலி கானே. அதை லோகேஷே பின்னர் பேட்டியில் கூறியுள்ளார்.

பல்வேறு வகையிலான நிகழ்ச்சிகளிலும் நடிகர் மன்சூர் அலி கான் அவ்வப்போது பங்கெடுத்த வருகிறார். அதில் ஒரு பங்காக நேற்று பக்ரீத் பண்டிகை கொண்டாடிய மன்சூர் அலி கான் பங்கேற்றார். அப்போது நடிகர், இப்போதைய ட்ரெண்டிங் விமர்சகர் நடிகர் கூல் சுரேஷ் வந்து கலந்து கொண்டார். அப்போது இவரை பார்த்தவுடன் நடிகர் மன்சூர் அலி கான் கூல் சுரேஷ் பேச விடாமல் தடுத்து அலப்பறை செய்தார். அந்த வீடியோ இப்பொது சமூகவலைத்தளங்களில்  மிகவும் வேகமாக பரவி வருகிறது. அந்த விடியோவை நீங்களும் காண…..

Video Courtesy- IndiaGlitzTamil

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்