விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களுக்கும், தொடர்களுக்கும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. தங்களது ரியாலிட்டி ஷோக்களின் மூலமாகவும், தொடர்களின் மூலமாகவும் பலரது வாழ்க்கை மாற்றி இருக்கிறது விஜய் டிவி. விஜய் டிவியில் தனது வாழ்க்கையை தொடங்கிய பலரும் இன்று தமிழின் உச்ச நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருக்கின்றனர். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் லொள்ளு சபாவில் பங்கேற்ற சந்தானம் இன்று காமெடியில் கலக்கிக் கொண்டிருக்கிறார். அது இது எது என்று நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த சிவகார்த்திகேயன் இன்று முன்னணி நடிகர்களின் வரிசையில் இருக்கிறார். மேலும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்ற பலரும் இன்று பல படங்களில் பின்னணி பாடவர்களாக இருக்கின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் மற்றொரு ரியாலிட்டி ஷோவான பிக்பாஸில் கலந்து கொண்ட பலரும் வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்துள்ளனர். அது போன்று ஒரு ரியாலிட்டி ஷோ தான் ராஜூ வூட்ல பார்ட்டி. இந்த நிகழ்ச்சியை பிக்பாஸ் சீசன் 5 வின்னரான ராஜு தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் இதில் பிரியங்கா மதுரை முத்து, ராமர் போன்றவர்கள் கலந்து கொண்டு காமெடி செய்து வருகின்றனர். விஜய் டிவியின் பிரபலங்கள் சிலரை அழைத்து அவர்களை வைத்து இந்த ஷோ நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது மன்சூர் அலிகான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். மன்சூர் அலிகானுக்கு அறிமுகமே தேவையில்லை. அவர் பல படங்களில் வில்லனாக நடித்து அசத்தி இருக்கிறார். சமீப காலமாக அவர் பேட்டிகளில் Thug Life செய்து வருகிறார். அவர் செய்யும் சேட்டைகளுக்காகவே அவரது பேட்டிகளை பலரும் விரும்பி பார்த்து வருகின்றனர்.
தற்போது ராஜூ வூட்ல பார்ட்டி நிகழ்ச்சிக்கு வந்த மன்சூர் அலிகான் பிரியங்காவுடன் நடனம் ஆடுகிறார் .மேலும் ராமர் மன்சூர் அலிகான் போலவே உடைய அணிந்து அவரை கலாய்க்கிறார். ஆனால் மன்சூர் அலிகான் ராமரை படாதபாடு படுத்தி இருக்கிறார். இந்த ப்ரோமோ தற்போது இணையத்தில் வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமோவை காண.. Watch the below video..
YouTube Video Code Embed Credits: Vijay Television