Categories: சினிமா

பிரபல நடிகர் உடன் கைகோர்க்கும் மாரிசெல்வராஜ்..! எதிர்பாராத கூட்டணியில் உருவாகும் படம்..!

வெளியிட்டது

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்திற்கு என்று மிகப்பெரிய அளவு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து சினிமாவில் முன்னணி இயக்குனர் என்ற இடத்தை பிடித்து உள்ளார். பரியேறும் பெருமாள் தொடங்கி, கர்ணன் , மாமன்னன் என தொடர்ந்து ஹிட் படங்கள் தான். இவர் தற்போது தனது வாழ்க்கையில் நடந்த ஒருதுயர சம்பவத்தை மையமாக வைத்து வாழை படத்தை எடுத்து உள்ளார்.

பிரபல நடிகர் உடன் கைகோர்க்கும் மாரிசெல்வராஜ்..! எதிர்பாராத கூட்டணியில் உருவாகும் படம்..! 1

இப்படம் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது. தற்போதுவரை பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி இருந்தது. தற்போது ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கும் இப்படத்தை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இவர் அடுத்ததாக துருவ் விக்ரம் உடன், பைசன் படத்தில் பணியாற்றி வருகிறார்.

இப்படத்திற்கு பிறகு மாரி செல்வராஜ்,நடிகர் தனுஷை வைத்து புதிய படத்தை இயக்க இருப்பதாக கூறப்பட்டது. தற்போது அந்த கதையில் நடிகர் கார்த்தியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கூட்டணியை எதிர்பார்க்காத நிலையில், ரசிகர்கள் இப்படத்திற்கு மிகப்பெரும் ஆவலுடன் உள்ளனர்.

வெளியிட்டது

புதிய செய்திகள்