Categories: சினிமா

மார்க் ஆண்டனி படத்தில் இருந்து வெளியான முதல் Glimpse வீடியோ.! சும்மா தீயா இருக்கே.! இதோ வீடியோ.!

வெளியிட்டது

நடிகர் விஷால் நடிக்கும் மார்க் ஆண்டனி படத்திலிருந்து முதல் கிலிம்ப்ஸ் வீடியோவை தற்போது படக்குழுவினர் வெளியிட்டு இருக்கின்றர். அந்த வீடியோவிற்கு தற்போது நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தமிழ் திரையுலகில் புரட்சித் தளபதியாக வலம் வருபவர் நடிகர் விஷால் இவர் தற்போது மார்க் ஆண்டனி என்கிற படத்தில் நடித்து வருகிறார். வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருக்கும் இவர் ஆக்ஷன் திரைப்படங்களில் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறார். நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும் பல நல்ல படங்களை தமிழ் ரசிகர்களுக்கு கொடுத்திருக்கிறார் விஷால். மேலும் விஷால் தற்போது துப்புரறிவாளன் பாகம் 2 படத்தில் இயக்குனராகவும் பணியாற்றி வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் லத்தி. இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை கொடுக்கவில்லை, இதனால் அடுத்த கதையை மிகவும் கவனமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தற்போது மீண்டும் ஆக்ஷன் திரைப்படத்தில் களமிறங்கி இருக்கிறார் விஷால். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மார்க் ஆண்டனி படத்தில் இருந்து வெளியான முதல் Glimpse வீடியோ.! சும்மா தீயா இருக்கே.! இதோ வீடியோ.! 1

அன்பானவன் அசராதவன் அடங்காதவன், திரிஷா இல்லனா நயன்தாரா மற்றும் பஹீரா ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குனர் ஆதித் ரவிச்சந்திரன். இவர் தற்போது விஷாலை வைத்து மார்க் ஆண்டனி படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஷாலுடன் இணைந்து எஸ் ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் இயக்குனர் செல்வராகவன், சுனில், நிழல்கள் ரவி, ஒய் ஜி மகேந்திரன், ரெட்டிங் கிங்ஸ்லி, அபிநயா உள்ளிட்ட மிகப்பெரிய நடிகர் பட்டாளுமே இந்த படத்தில் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். மினி ஸ்டுடியோஸ் சார்பில் வினோத்குமார் இந்த படத்தை தயாரித்து வருகிறார். 60களில் நடக்கும் கேங்ஸ்டர் இன் கதைக் களத்தை மையமாக வைத்து இந்த படம் உருவாகி வருவதாக தெரிகிறது. விஜய் வேலு குட்டி என்பவர் படத்தொகுப்பு செய்ய, அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் படப்பிடிப்புகள் மும்முரமாக வரும் நடந்து வரும் நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் ஷூட்டிக் ஸ்பாட்டில் மிகப்பெரிய விபத்து ஒன்று ஏற்பட்டிருந்தது.


நிறுத்து வைக்கப்பட்டிருந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து ஷூட்டிங் ஸ்பாட்டிற்குள் உள்ளே புகுந்தது. இதனால் நூலிழையில் எஸ்.ஜே சூர்யா மற்றும் விஷால் இருவரும் உயிர் தப்பி இருந்ததாக கூறியிருந்தனர். இருந்த போதிலும் படபிடிப்புகள் தொடர்த்து நடந்து வருகிறது. படத்தின் மோஸ்டர் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகி இருக்கிறது. அதை படக்குழுவினர் தங்கள் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். இதையடுத்து இந்த போஸ்டரை விஷால் ரசிகர்கள் அதிக அளவில் வைரலாக்கி வருகின்றனர். விஷால் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்து, “வெல்கம் டு தி ரெட்ரோ மியூசிக் வேர்ல்ட் ஆப் மார்க் ஆண்டனி” என்று பகிர்ந்து இருக்கிறார். நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

 

Youtube Video Embed Code Credits: Mini Studio

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்