விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி சில நாட்களுக்கு முன்பு நிறைவடைந்தது. 105 நாட்கள் நடந்து வந்த இந்த நிகழ்ச்சி கடந்த ஞாயிறு அன்று பிரம்மாண்டமான இறுதி நிகழ்ச்சியுடன் நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட மாயா தற்போது பிக்பாஸிலிருந்து வெளியேறிய பின்னர் தனது முதல் பதிவை பகிர்ந்து இருக்கிறார். அவர் டைட்டில் வின்னரான அர்ச்சனாவிற்காக அந்த பதிவை பகிர்ந்து இருக்கிறார். இந்த பதிவை பார்த்த அர்ச்சனாவின் ரசிகர்கள் பலரும், “நீங்கள் இதுவரை செய்தது போதும் இனியும் நடிக்காதீர்கள்” என்று கோபத்துடன் கூறி வருகின்றனர்.

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக இருந்தவர் மாயா. இவர் ‘விக்ரம்’,‘லியோ’ உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். இந்த சீசனில் மற்ற போட்டியாளர்கள் மீது வன்மத்தை காட்டி, புல்லி கேங் என்று பெயர் எடுத்தார் மாயா. இருந்தபோதிலும் மாயா விஜய் டிவி மற்றும் கமலஹாசனின் ஆதரவு காரணமாக சீசனின் இறுதிவரை வந்துவிட்டார் என்று தொடர்ந்து ரசிகர்கள் குற்றச்சாட்டுகளை கூறி வந்தனர். இந்த நிலையில் மாயா மூன்றாவது இடத்தை பிடித்து பிக் பாஸில் இருந்து வெளியேறி இருந்தார். மணிச்சந்திரா இரண்டாவது இடத்தையும், அர்ச்சனா முதலிடத்தில் பிடித்து இந்த சீசனின் டைட்டிலை வெற்றி பெற்றிருந்தார். இந்த நிலையில் பிக் பாஸில் இருந்து வெளியே வந்த பின்னர் முதல் முறையாக மாயா அர்ச்சனாவிற்காக ஒரு பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார்.
அதில், “டியர் அர்ச்சனா நீங்கள் டைட்டிலை வெற்றி பெற்றதற்காக உங்களை வாழ்த்துகிறேன். நீ நினைச்ச மாதிரி உன் வாழ்க்கையில் பூ பூக்கும். செடி வாடி போற மாதிரி இருந்தா என்னை கூப்பிடு. நான் வந்து தண்ணி ஊத்துறேன். நான் உனக்கு சத்தியம் செய்து கொடுத்த மாதிரி உனக்காக எப்பவும் இருப்பேன். #பூ_பூக்கும்_நண்பா என்ற ஹேஷ்டேக்குடன் அந்த பதிவை பகிர்ந்து இருக்கிறார். இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் பலரும், நீங்கள், பிக்பாஸுல இருந்தப்ப ஊத்தின தண்ணியே போதும், அதுல ஒரு புல்லு கூட முளைக்காது. பூர்ணிமா ரவிக்கு செடிக்கு போய் தண்ணி ஊத்துங்க” என்று கமெண்ட்களை தெரிவித்து வருகின்றனர்.
Twitter Original Source From: Maya S Krishnan