பிக்பாஸிலிருந்து வெளியேறிய பின்னர் மாயா மற்றும் கானா பாலா இருவரும் இணைந்து வனிதா வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தற்போது வனிதா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். பிக்பாஸ் சீசன் 7 தொடங்கி 105 நாட்களை நிறைவு செய்து பிரம்மாண்டமாக முடிந்திருக்கிறது. இதில் அர்ச்சனா வெற்றி பெற, மணிச்சந்திரா இரண்டாவது இடத்தை பிடித்திருந்தார்.

மூன்றாவது இடத்தை மாயாவும், நான்காவது இடத்தை தினேஷும், ஐந்தாவது இடத்தை விஷ்ணுவும் பிடித்திருந்தனர். இதில் மாயா மீது தொடர்ந்து ரசிகர்கள் விமர்சனம் வைத்துக் கொண்டே இருந்தனர். மாயாவை விஜய் டிவியும், கமலஹாசனும் இணைந்து காப்பாற்றுவதாக அவர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர்.
ஆனால் இந்த விமர்சனங்களை எல்லாம் புறம் தள்ளி மாயா மூன்றாவது இடத்தை பிடித்து அசத்தியிருந்தார். இந்த நிலையில் பிக் பாஸில் இருந்து வெளியேறிய பின்னர் தன்னை ஆதரித்த ரசிகர்களுக்கு நன்றி சொல்லி அவர் பதிவுகளை பகிர்ந்து இருந்தார். இதற்கிடையில் இன்று வனிதா விஜயகுமாரின் இல்லத்திற்கு தனது சகோதரி சுவாகதா உடன் சென்றிருக்கிறார் மாயா.
மேலும் ஜோவிகா, கானா பாலா, மாயா, வனிதா, வனிதாவின் இளைய மகள் ஜெயனிதா ஆகியோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வனிதா தற்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அந்த புகைப்படங்களுக்கு லைக்குகளும் குவிந்து வருகிறது.