மயில்சாமியின் இரு மருமகளும் விவாகரத்து கேட்கிறார்களா? நடந்தது என்ன? விளக்கம் கொடுத்த மகன்.!

வெளியிட்டது

பிரபல காமெடி நடிகராக இருந்த மயில்சாமி மறைவுக்கு பின்னர் அவரது இரண்டு மகன்களின் மனைவிகளும் விவாகரத்து கேட்டு வருவதாக தற்போது செய்தி வெளியான நிலையில் அது குறித்து மயில்சாமியின் மகனே தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். அப்போது அவர் அந்த செய்தி குறித்து முழு விளக்கத்தையும் அளித்து இருக்கிறார். தமிழ் திரையுலகில் பல காமெடி நடிகர்கள் இருந்தபோதிலும் மக்கள் மனங்களில் நீங்காத இடம் பிடித்தவர் நடிகர் மயில்சாமி. தான் சம்பாதிக்கும் பணத்தில் பல பெரும்பாலான பகுதிகளை ஏழைகளுக்கு கொடுத்து உதவிய அந்த நல்ல மனிதர் சில மாதங்களுக்கு முன்பு மாரடைப்பால் காலமானார். சிவராத்திரி அன்று இரவு முழுவதும் கோயிலில் பூஜை செய்து தூங்காமல் இருந்த அவர் விடியற்காலை வீட்டிற்கு செல்லும் வழியில் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்திருந்தார். இது திரையுலகம் மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களிடையே மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.

மயில்சாமியின் இரு மருமகளும் விவாகரத்து கேட்கிறார்களா? நடந்தது என்ன? விளக்கம் கொடுத்த மகன்.! 1

இந்த நிலையில் தற்போது மயில்சாமியின் இரண்டு மகன்களின் மனைவிகளும் விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக சில நாட்களாக தகவல்கள் வெளியானது. மயில்சாமியின் மனைவிக்கும் மருமகளுக்கும் பிரச்சனை என்றும், மயில்சாமி இருந்தவரை இந்த பிரச்சனை பெரிதாகாமல் பார்த்துக் கொண்டதாகவும் அவர் இறப்புக்கு பின்னர் இந்த பிரச்சனை மீண்டும் கிளம்பி இருப்பதாகவும், இதனால் இரண்டு மருமகள்களும் அடுத்தடுத்து விவாகரத்து கேட்டு நீதிமன்றம் வரையில் சென்று இருப்பதாகவும் இரண்டு நாட்களாக வதந்திகள் கொடி கட்டி பறந்து வந்தது. இதுகுறித்து சாமியின் மகன்கள் இடமிருந்தும் எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் பிரபல ஊடகம் ஒன்று, மயில்சாமியின் மூத்த மகன் அன்புவைத் தொடர்பு கொண்டு இது குறித்து கேள்வி எழுப்பினர். அது குறித்து பேசிய அவர், இது முழுக்க முழுக்க வதந்தி, இந்த தகவலில் துளியும் உண்மை இல்லை என்று அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளித்திருக்கிறார்.


மேலும் இது முழுவதும் பைத்தியக்காரமான செய்தி, கீழ்த்தரமாக செய்திகளை பரப்புகிறார்கள், ஏன் இவ்வாறு செய்கிறார்கள் என்று தெரியவில்லை என அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இந்த சர்ச்சைகளுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். மயில்சாமியின் மூத்த மகன் அன்பு தமிழக துணை சபாநாயகராக இருக்கும் கு.பிச்சாண்டி அவர்களின் மகளை சமீபத்தில் திருமணம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த திருமண வரவேற்பிற்க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் பெருமக்கள், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.! மயில்சாமியின் மகன்கள் அன்பு மற்றும் யுவன் ஆகிய இருவரும் படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வரும் நிலையில் தற்போது இந்த செய்தி பூதாகரமாகி இருந்தது. உடனடியாக இதற்கு விளக்கம் அளித்து இந்த சர்ச்சைகளுக்கு அவரது மகன்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்