Categories: சினிமா

மீனாவின் 47வது பிறந்தநாள்.! நள்ளிரவு 12 மணிக்கு கேக் வெட்டி கொண்டாடிய தோழிகள்.! இதோ வீடியோ.!

வெளியிட்டது

நடிகை மீனா இன்று தனது 47வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் நேற்று இரவு நடிகைகள் பலரும் அவரது வீட்டிற்கு சென்று பிறந்தநாள் கொண்டாடியுள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மீனாவின் 47வது பிறந்தநாள்.! நள்ளிரவு 12 மணிக்கு கேக் வெட்டி கொண்டாடிய தோழிகள்.! இதோ வீடியோ.! 1
80களில் தொடங்கி தமிழின் முண்ணனி நடிகையாக வலம் வருபவர் நடிகை மீனா. குழந்தை நட்சத்திரமாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய அவர், பின்னாளில் நடிகையாக உயர்ந்தார்.


15 வயதிலேயே ஹீரோயினாக அறிமுகம் ஆனார். 1991ம் ஆண்டு வெளியான ‘என் ராசாவின் மனசிலே’ என்ற படத்தின் மூலமாக அறிமுகமாகி இன்று வரை பல படங்களில் நடித்து முடித்துள்ளார்.


திரைத்துறைக்கு வந்து குறுகிய காலத்திலேயே ரஜினி, கமல், சரத்குமார், சத்யராஜ், விஜயகாந்த், பிரபு என அப்போது இருந்த முண்ணனி நடிகர்கள் அனைவருடனும் நடித்து முடித்திருந்தார்.


பின்னர் அடுத்த தலைமுறையான விஜய் மற்றும் அஜீத்துடனும் ஒரு கலக்கு கலக்கியிருந்தார். கடைசியாக ரஜினிகாந்த்தின் மாமன் மகளாக ‘அண்ணாத்த’ படத்தில் நடித்திருந்தார்.


தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளிலும் கோலோச்சிய அவர் திரைத்துறைக்கு வந்து 40 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். அவருக்கு ‘மீனா40’ என்ற விழாவும் சமீபத்தில் நடத்தப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் இன்று அவரின் 47வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது. அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக சினேகா, அனிதா விஜயகுமார், ரேணுகா பிரவீன், நடிகை விஜி போன்றவர்கள் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

அந்த வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மீனாவுக்கு 47 வயதா? நம்பவே முடியவில்லையே என்று ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்