Categories: சினிமா

கணவர் இழப்பிலிருந்து மீண்டும் வரும் மீனா..கணவர் இறப்புக்கு பின் முதல் முறையாக மீனா போட்ட போஸ்ட்

வெளியிட்டது

தமிழின் முண்ணனி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் மீனா. இவர் குழந்தையாக இருத்த போதே பல படஙகளில் நடித்துள்ளார். அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்து இருப்பார் மீனா. பின்னர் என் ராசாவின் மனசினிலே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். இந்த படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தது. அமைதியான முகம், முகத்தில் எப்போதும் சிரிப்பு, தலைக்கனம் இல்லாத பேச்சு என மற்ற நடிகைகளில் இருந்து வித்தியாசமாக இருந்தவர் மீனா. தனெக்கென ஒரு அழகான வாழ்க்கையை வாழ்ந்தவர். அப்படிப்பட்ட அவரின் வாழ்க்கையில் புயல் வீசியது போன்ற சம்பவம் ஜூன் 29ம் தேதி நடந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த மீனாவின் கணவர் இறந்துவிட்டதாக வந்த செய்தி தமிழகத்தையே உலுக்கியது. நுரையீரல் அலர்ஜியால் ஏற்கனவே பாதிக்கப்பட்டு இருந்த அவருக்கு கொரோனா தொற்றும் ஏற்படவே அவர் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்தது.

கணவர் இழப்பிலிருந்து மீண்டும் வரும் மீனா..கணவர் இறப்புக்கு பின் முதல் முறையாக மீனா போட்ட போஸ்ட் 1

இதனால் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய எவ்வளவோ முயன்றும், இரத்த வகை பொருந்தி போகாத காரணத்தால் மூன்று மாதங்களுக்கு மேலாக மருத்துவமனையில் இருந்த அவருக்கு எக்மோ கருவி பொருத்தப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மீனாவுக்கு ரஜினிகாந்த், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலரும் ஆறுதல் தெரிவித்தனர். இதல் மீனாவின் தோழிகளான ரம்பா, சங்கீதா, சங்கவி, கலா மாஸ்டர் போன்றவர்கள் இறுதி வரை இருந்து மயானத்திற்கு வரை சென்று இறுதிச் சடங்குகள் முடியும் வரை மீனாவிற்கு உறுதுணையாக இருந்தனர். இவர்களை நெட்டிசன்கள் பலரும் பாராட்டினர். இப்படிப்பட்ட தோழிகள் கிடைப்பதற்கு மீனா கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றும் அவர்களை பாராட்டி வந்தனர்
இந்த நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன் பின்பு மீனா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

அதில் மீனாவின் கணவர் இறந்தபோது உறுதுணையாக இருந்த ரம்பா, சங்கீதா சங்கவி போன்றவர்கள் மீனாவின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு மீனா மற்றும் அவருடைய மகள் நைனிகாவுடனும் போட்டோ எடுத்துள்ளனர். அனைவரும் குடும்பத்துடன் சென்று மீனாவிற்கு ஆறுதலாக இருந்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியா பக்கங்களில் வைரலாகி வருகிறது. கணவன் இறந்த பிறகு எந்தவித புகைப்படத்தையும் வெளியிடாமல் இருந்த மீனா, தற்போது முதன்முறையாக புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் மீனாவை பார்க்கும் போது தனது கணவன் இழப்பிலிருந்து அவர் சற்று மீண்டு வருவது போல இருக்கிறது. இதை பார்த்த மீனாவின் ரசிகர்கள் பலரும், கணவன் இழப்பிலிருந்து மீனா மீண்டு வருவது குறித்து தங்களது மகிழ்ச்சியை பதிவு செய்து வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்