Categories: சினிமா

தோழியுடன் வெளிநாட்டில் என்ஜாய் பண்ணும் மீனா.! இன்ஸ்டாகிராமில் மீனா போட்ட பதிவு

வெளியிட்டது

கணவர் இறப்புக்கு பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தேறி வரும் மீனா தற்போது மீண்டும் பழைய ஃபார்முக்கு வந்துள்ளார். மார்டன் உடையில் வீடியோ எடுத்து அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார் மீனா. குழந்தை நட்சத்திரமாக சினிமா துறையில் அறிமுகமாகி பின்னர் “என் ராசாவின் மனசினிலே” என்ற ராஜ்கிரண் படத்தின் மூலமாக கதாநாயகியாக உருவெடுத்தார். அதன் பின்னர் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல படங்களில் நடித்திருக்கிறார். மலையாளத்தில் இவர் மோகன்லாலுடன் இணைந்து நடித்த திர்ஷ்யம் படம் பெரிய அளவில் பேசப்பட்டது. அதேபோல் தமிழில் இவர் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடித்த முத்து படம் ஜப்பானில் மிகப் பிரபலமாக ஓடி வசூலையும் குவித்திருந்தது. கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.

தோழியுடன் வெளிநாட்டில் என்ஜாய் பண்ணும் மீனா.! இன்ஸ்டாகிராமில் மீனா போட்ட பதிவு 1

சென்னையில் பிறந்து வளர்ந்த மீனாவுக்கு 2009 ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவருடன் திருமணம் ஆனது. இவர்களுக்கு நைனிகா என்ற ஒரு மகளும் இருக்கிறார். நைனிகா விஜயுடன் இணைந்து தெறி படத்தில் விஜய்க்கு மகளாக நடித்திருப்பார். இந்த நிலையில் நுரையீரல் பாதிப்பால் பாதிக்கப்பட்டிருந்த வித்யாசாகர் சமீபத்தில் மரணம் அடைந்தார். அவரது இறப்புக்கு பின்னர் அவ்வளவாக பொதுவெளியில் வருவதோ அல்லது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பதோ என்று இல்லாமல் தனிமையாக இருந்து வந்தார் நடிகை மீனா. அவரை அவரது தோழிகள் ரம்பா, சங்கவி, சங்கீதா, கலா மாஸ்டர் என கூடவே இருந்து தேற்றி வந்தனர். சமீபத்தில் கூட மீனாவை அழைத்துச் சென்று மீனாவின் பிறந்தநாளை கொண்டாடி இருந்தனர்.

இந்த நிலையில் தற்போது மீனா மீண்டும் மார்டன் உடையில் ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார். அதை பார்த்த பலரும் நீங்கள் பழைய ஃபார்முக்கு திரும்பியது எங்களுக்கு மகிழ்ச்சி என்று கீழே கமெண்ட்களில் தெரிவித்து வருகின்றனர். அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the below video..

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்