90களில் முன்னனி நடிகையாக இருந்தவர் நடிகை மீனா. இவருக்கு கடந்த 13 வருடங்களுக்கு முன்பு பெங்களூருவை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் ஆன வித்யாசாகர் என்பவருடன் திருமணம் ஆனது. இவர்களுக்கு நைனிகா என்ற மகளும் இருக்கிறார். 13 வருடங்கள் அழகான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த மீனாவின் வாழ்க்கையில் புயல் வீசியது போல நுரையீரல் பிரச்சனையால் இரண்டு மாதங்களுக்கு முன்பு மீனாவின் கணவர் மரணமடைந்தார். நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய உறுப்புகள் கிடைக்காத காரணத்தினால் தான் அவர் உயிரிழந்தார். இது குறித்து சமீபத்தில் பதிவிட்டு இருந்த மீனா என் கணவருக்கு உறுப்புகள் சரியாக கிடைத்திருந்தால் அவரைக் காப்பாற்றி இருப்பேன் என்று உருக்கமாக பதிவிட்டு இருந்தார். இதன் பின்னர் மீனா பெரிய அளவில் எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்துக் கொள்ளாமல் இருந்து வந்தார்.

தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக பல நிகழ்ச்சிகளில் தலைகாட்டத் தொடங்கி இருக்கிறார் மீனா. அவரது தோழிகள் சங்கவி, ரம்பா, கலா மாஸ்டர், சங்கீதா போன்றவர்கள் அடிக்கடி மீனாவின் வீட்டிற்கு சென்று அவருக்கு ஆறுதலாக இருந்து வருகின்றனர். மேலும் அவரை கடற்கரைகள் மற்றும் பொதுவெளிக்கும் கூட்டிச் சென்று வருகின்றனர். சமீபத்தில் நடிகை ராதிகாவின் 60-வது பிறந்தநாள் சென்னையில் கொண்டாடப்பட்டது. அதிலும் மீனா பங்கெடுத்து இருந்தார். கணவர் இருந்த துக்கத்திலிருந்து சிறிது சிறிதாக மீண்டு வருகிறார் மீனா. அதற்கு அவரது தோழிகளும் உறுதுணையாக இருக்கின்றனர். சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருந்த மீனா, கணவர் இறப்புக்கு பின்னர் பதிவுகள் போடுவதை குறைத்துக்கொண்டார். உடல் உறுப்புகள் தானம் செய்வதை வலியுறுத்தி அவர் கடைசியாக ஒரு பதிவை போட்டிருந்தார்.
அதில் அவர் ஒரு உடல் தானம் செய்வதன் மூலமாக எட்டு உயிர்களை நாம் காப்பாற்ற முடியும் என்று பதிவிட்டு இருந்தார். இந்த நிலையில் மீண்டும் தற்போது அவர் ஒரு புதிதாக ஒரு பதிவை போட்டுள்ளார். அதில் தனது சிறுவயது புகைப்படங்களை அவர் பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர் வாழ்க்கை ஒரு ரோலர் கோஸ்டர் போன்றது, பல ஏற்றத்தாழ்வுகள் இருக்கத்தான் செய்யும். இந்த நிமிடம் மட்டுமே நம்மிடம் இருப்பது. இதை வாழ்ந்து காட்டுங்கள் என்று வாழ்க்கையின் தத்துவத்தை அழகாக அவர் பகிர்ந்திருக்கிறார். அவர் கணவரின் இறப்பு குறித்து தான் இவ்வாறு சோகமாக பதிவிட்டுள்ளதாக அவரது ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.