Categories: சினிமா

கணவருடன் மீனா எடுத்துக்கொண்ட இதுவரை வெளியிடாத அழகிய புகைப்படங்கள்..இந்த அழகான குடும்பத்துக்கு இப்படி ஒரு சோதனையா?

வெளியிட்டது

தமிழ் திரையுலகில் முண்ணனி கதாநாயகியாக இருந்தவர் நடிகை மீனா. இவர் குழந்தையாக இருந்த போதே சினிமாவில் அறிமுகமாகி 90களில் கொடிகட்டிப் பறந்தவர். அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்து இருப்பார். பின்னர் என் ராசாவின் மனசிலே என்ற படத்தில் அறிமுகமாகி பின்னர் விஜய், அஜீத், கமல், ரஜினி போன்ற அனைத்து முண்ணனி நடிகர்களுடன் நடித்துவிட்டார். தமிழில் சாமி படங்களில் அம்மன் வேடங்களில் நடிக்க சிலர் மட்டுமே பொருத்தமாக இருப்பர். அதில் மீனாவும் ஒருவர் பாளையத்தம்மன், படைவீட்டு அம்மன் போன்ற படங்களில் அம்மன் வேடங்களிலும் நடித்து அசத்தியிருப்பார். இவர் கடைசியாக நடித்த படம் அண்ணாத்த. ரஜினியின் முறைப் பெண்ணாக காமெடி ரோலில் நடித்து இருப்பார் மீனா.

கணவருடன் மீனா எடுத்துக்கொண்ட இதுவரை வெளியிடாத அழகிய புகைப்படங்கள்..இந்த அழகான குடும்பத்துக்கு இப்படி ஒரு சோதனையா? 1

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் நடித்து வந்தார். கடந்த வாரம் மீனாவின் கணவர் காலமான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீனாவின் கணவர் வித்யாசாகர். சாஃப்ட்வேர் இன்ஜினியரன இவருக்கு கடந்த 2009ம் ஆண்டு மீனாவுடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு நைனிகா என்ற மகளும் உள்ளனர். நைனிகா 2016ம் ஆண்டு வெளியான “தெறி” என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருந்தார். இந்த நிலையில் உடல் நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த மீனாவின் கணவர் கடந்த வாரம் சிகிச்சை பலனின்றி உயிரழந்தார். இது திரையுலகை மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியிருந்தது.

பலரும் மீனாவின் கணவர் குறித்து பலவிதமாக பேசி வந்த நிலையில் மீனாவே விளக்கம் அளித்து இருந்தார். எங்களது தனியுரிமையை மதித்து இனிமேலும் கணவர் இறப்பு பற்றி தவறான செய்திகளை பதிவிட வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார். இது குறித்து பேசிய கலா மாஸ்டர் வித்யாசாகர் மருத்துவமனையில் இருந்த போது மீனா அவரை குழந்தைபோல் பார்த்துக் கொண்டார் என்றும் மகள் நைனிகா தந்தை இறந்த துக்கத்தில் சாப்பிடவே இல்லை என்றும் கூறினார். கணவர் பற்றி அவ்வளவாக புகைப்படத்தையோ, வீடியோக்களையோ பகிராத மீனா தன் கணவருடன் இருக்கும் அரிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. இது மீனாவின் ரசிகர்களை மேலும் கவலையடைய செய்துள்ளது. நன்றாக இருந்த குடும்பம் இப்படி ஆகிவிட்டதே என்று கவலை தெரிவித்து வருகின்றனர். Watch the below Video..

Youtube Video Code Embed Credits: Gup Chup Masthi

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்