Categories: சினிமா

நான்கு நாட்களில் மெய்யழகன் படத்தின் மொத்த வசூல்..! லாபமா வெற்றியா..! வெளியான அப்டேட்..!

வெளியிட்டது

இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில், நடிகர் கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் படம் மெய்யழகன். இப்படத்தில் கதாநாயகியாக ஸ்ரீ திவ்யா நடித்து உள்ளார். மேலும் ராஜ்கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் கோவிந்த் வசந்த் இசையமைத்து உள்ளார். பெரும் எதிர்பார்ப்பில் இப்படம் கடந்த வாரம் வெளியாகி உள்ளது.

நான்கு நாட்களில் மெய்யழகன் படத்தின் மொத்த வசூல்..! லாபமா வெற்றியா..! வெளியான அப்டேட்..! 1

படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று உள்ளது. இதனால் படத்தின் மொத்த நீளத்தில், 18 நிமிடங்கள் 42 நொடிகள் குறைக்கப்பட்டு 2மணி நேரம் 38 நிமிடங்களாக திரையில் தொடரும் என அறிக்கை வெளியிட்டு இருந்தது தயாரிப்பு நிறுவனம். இந்நிலையில் இப்படம் வெளியாகி நான்கு நாட்கள் ஆகிய நிலையில் படத்தின் வசூல் விபரம் வெளியாகியுள்ளது.

இப்படம் நான்கு நாட்கள் உலகளவில், ரூ. 28.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்பார்த்த வரவேற்பினை பெறாவிட்டாலும், வசூலில் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது.

வெளியிட்டது

புதிய செய்திகள்