தமிழ் சினிமாவில் அமீர் இயக்கத்தில் பருத்திவீரன் படத்தில் நடித்து கதாநாயகனாக அறிமுகமாகியவர் கார்த்தி. இந்த படத்தில் இவரது நடிப்பு, ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டு இருந்தது. முதல் படத்திலேயே தனது அசாத்திய நடிப்பினை காட்டி முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். தொடர்ந்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து அசத்தி வரும் இவர், அதிக புதிய இயக்குனர்களுடன் படம் நடித்த என்ற பெயரினை பெற்றுள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி நிறுவனம் தயாரிப்பில், இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் அரவிந்த் சாமியுடன் இணைந்து முதல் முறையாக மெய்யழகன் எனும் படத்தில் நடித்து உள்ளார். கோவிந்த் வசந்த் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு கதாநாயகியாக ஸ்ரீ திவ்யா நடித்து உள்ளார். இவர்களுடன் நடிகர் ராஜ் கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்.
இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உருவாகி இருக்கிறது. ரசிகர்கள் மெய்யழகன் படத்திற்கு ஆவலுடன் காத்து உள்ளனர். தற்போது இப்படத்தின் சில நிமிட காட்சிகள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
Embed Video Credits : Moviebuff