இக்காலத்தில் சீரியல் என்றாலே அனைவரும் பார்க்கின்றனர். அவ்வாறு இருக்க பல ஆண்டுகளுக்கு முன் ஒளிபரப்பான சன் டிவி ‘மெட்டி ஒலி’ சீரியல் அன்றே மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. திருமுருகன் இயக்கத்தில் மெட்டி ஒலி வெற்றிகரமாக 811 அத்தியாயத்துடன் முடிவடைந்தாலும் இன்று மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

லாக்டவுன் காலக்கட்டத்தில் மீண்டும் சன் டி.வி.யில் ஒளிபரப்பாகி வருகிறது மெட்டி ஒலி. இதில் செல்வம் கதாபாத்திரத்தில் விஷ்வா என்கிற ‘விஸ்வநாதன்’ அருமையாக நடித்து மக்களிடம் தனி அன்பைப் பெற்றவர். இருப்பினும் சித்தி சீரியல் தான் அவரின் முதல் சின்னத்திரை என்ட்ரி ஆகும். விஸ்வா மேலும் அலைகள், கோலங்கள், கோபுரம், மர்மதேசம், பொன்னுஞ்சல்
சீரியல்களில் நடித்து அசத்தியுள்ளார். பின்னர் சில படங்களில் வாய்ப்பு கிடைத்ததால் அதிலும் நடித்தார். ஆனால் சீரியலில் மூலம் கிடைத்த புகழ் படத்தின் மூலம் கிடைக்காமல் போகவே அவர் வருந்தியுள்ளார் என்று ஒரு பேட்டியிலும் கூறியுள்ளார். பின்னர் அவர் சுனிதா என்கிற தொழில் அதிபரின் மகளைத் திருமணம் செய்தார். இருவருக்கும் 14வயதில் ஒரு மகன் இருக்கிறார். தற்போது இவர் சொந்தமாக தொழில் செய்து வருகிறார்.