மின்சார கண்ணா திரைப்படத்தில் தளபதிக்கு ஜோடியாக நடித்த நடிகை தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?

வெளியிட்டது

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய்யுடன் ஒரு படத்தில்லாவது நடித்துவிட வேண்டும் என பல நடிகைகள் எதிர்ப்பார்க்கின்றனர். ஆனால் அவர் 90ஸ் கால கட்டத்தில் நடித்தபோது அவருடன் நடித்த நடிகைகள் எல்லாருமே பிரபலமடைந்துள்ளனர். அப்படி 1999ல் வெளிவந்த மின்சார கண்ணா என்ற படம் அனைவருக்கும் பிடித்த படமாகவே இருக்கிறது. அந்த படத்தை கே.எஸ்.

மின்சார கண்ணா திரைப்படத்தில் தளபதிக்கு ஜோடியாக நடித்த நடிகை தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா? 1

ரவிகுமார் இயக்கினார். இந்த படத்தில் ரம்பா மூன்றாவது முறையாக விஜய்யுடன் நடித்தார். இருப்பினும் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கவில்லை முக்கியமான கதாபாத்திரத்திலே நடித்தார். மின்சார கண்ணா படத்தில் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் மோனிகா காஸ்டிலோனா. இவர் இதற்கு முன் ஹிந்தி படத்தில் அறிமுகமாகினார்.

மின்சார கண்ணா படத்தில் இவருடைய நடிப்பும் தோற்றமும் ரசிகர்களை கவர்ந்தது. பின்பு இவர் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடிப்பார் என எதிர்ப்பாக்கப்பட்டது. ஆனால் அவருக்கு தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. ஹிந்தியில் சில படங்களில் நடித்தார். இருப்பினும் இவரால் வெற்றி பெற இயலவில்லை.

தற்போது மோனிகா காஸ்டிலோனா ஹிந்தி தொடர்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் தான் இவர் மின்சார கண்ணா படத்தில் நடித்த நாயகி என தெரியவந்துள்ளது. இவர் இப்பொழுதும் அழகான தோற்றத்துடனே இருக்கிறார். இன்றைய நாளில் கூட “உன் பேர் சொல்ல ஆசை தான்” பாடலை கேட்டால் தளபதி விஜய்யும் மோனிகாவும் நடித்தது தான் ரசிகர்களின் நினைவில் உள்ளது.

Kiruthika

அகந்தை முன்னே செல்லும், அவமானம் பின் தொடரும். I've danced to AR Rahman's tunes and cheered for Rajinikanth, and now, I'm your go-to journalist for all things Tamil entertainment, offering an insider's perspective that's second to none.

வெளியிட்டது

புதிய செய்திகள்