விஜய் டிவியில் இருந்து வேறு சேனலுக்கு சென்ற மிர்ச்சி செந்தில்.! ஷூட்டிங் spot-ல் இருந்து கசிந்த போட்டோஸ்

வெளியிட்டது

மிர்ச்சி செந்தில் தற்போது விஜய் டிவியில் இருந்து விலகி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ள அண்ணன் என்கிற நாடகத்தில் நடிக்க இருக்கிறார். இந்த நாடகத்திற்கான படப்பிடிப்புகள் தற்போது சென்னையில் தொடங்கியிருக்கிறது. இந்த நாடகத்தில் நடிகைகள் நித்யா ராம், ரித்திகா தமிழ்செல்வி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

விஜய் டிவியில் இருந்து வேறு சேனலுக்கு சென்ற மிர்ச்சி செந்தில்.! ஷூட்டிங் spot-ல் இருந்து கசிந்த போட்டோஸ் 1

ரேடியோ மிர்ச்சி என்கிற வானொலியில் ஆர்ஜே வாக தனது வாழ்க்கையை தொடங்கியவர் செந்தில். ஆனால் இவருக்கு சரவணன் மீனாட்சி தொடர் தான் திருப்புமுனையாக அமைந்தது. முதன் முறையாக 2007 ஆம் ஆண்டு ஒளிபரப்பான மதுர என்கிற சீரியலில் நடித்து மக்கள் மனங்களில் நீங்காத இடம் பிடித்தார். இந்த சீரியல் 2009 வரை ஒளிபரப்பானது.

பின்னர் இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் 2011 ஆம் ஆண்டு சரவணன் மீனாட்சி என்கிற தொடரில் சரவணன் கதாபாத்திரத்தில் நடித்து மக்களுக்கு பிடித்த நடிகராக மாறிப் போயிருந்தார்.

இந்த நாடகத்தில் தன்னுடன் நடித்த ஸ்ரீஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே செந்திலுக்கு திருமணமாகி குழந்தைகள் இருந்த நிலையில், முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு ஸ்ரீஜாவை இரண்டாவதாக திருமணம் செய்து இருந்தார். சமீபத்தில் இந்த தம்பதிகளுக்கு ஆண் குழந்தை பிறந்து இருப்பதாக அறிவித்திருந்தனர்.

சின்னத்திரை மட்டுமில்லாது வெள்ளித்திரையிலும் சில படங்களில் நடித்திருக்கிறார் செந்தில். தவமாய் தவமிருந்து, பப்பாளி, வெண்ணிலா வீடு போன்ற சில படங்களிலும் நடித்திருக்கிறார். வெள்ளித்திரை பெரிய அளவில் கை கொடுக்காமல் போனதால் மீண்டும் சின்னத்திரை பக்கம் திரும்பிய அவர், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் என்கிற சீரியலில் மாயன் கதாபாத்திரத்தில் நடித்தார்.

நீண்ட இடைவெளி எடுத்தபோதிலும் இவருக்கு அதே வரவேற்பு இருந்தது. பின்னர் ஒருநாள் திடீரென இந்த சீரியலும் முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. தற்போது எந்த நாடகத்திலும் கமிட்டாகாமல் இருந்து வந்த செந்தில் விஜய் டிவியிலிருந்து விலகி உள்ள செய்தி கிடைத்திருந்தது.


அவர் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாக இருக்கும் அண்ணா என்கிற சீரியலில் நடிக்க இருக்கிறார். இந்த சீரியலில் செந்திலுக்கு ஜோடியாக நடிகை நித்யா ராம் நடிக்க இருக்கிறார். மேலும் பாக்கியலட்சுமி தொடரில் அமிர்தா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ரித்திகா செந்திலுக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

அண்ணன் தங்கை உறவை மையப்படுத்தியும், அந்த ஆழமான உறவை முதன்மைப் படுத்தியும் இந்த நாடகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து சில புகைப்படங்கள் கசிந்துள்ளது. அதில் நடிகை நித்யா ராம் மற்றும் மிர்ச்சி செந்தில் இருவரும் ஷூட்டிங்கை தொடங்கி வைத்திருக்கின்றனர். அந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியிருக்கிறது.

சரவணன் மீனாட்சி போல இந்த நாடகமும் செந்திலுக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்