மிர்ச்சி செந்தில் நடிக்கும் புது சீரியல்..! ப்ரோமோவை வெளியிட்ட ஜீ தமிழ்.! இதோ வீடியோ.!

வெளியிட்டது

மிர்ச்சி செந்தில் தற்போது ஹீரோவாக நடிக்கும் புதிய சீரியலின் ப்ரோமோவை ஜீ தமிழ் தொலைக்காட்சி தற்போது வெளியிட்டு இருக்கிறது. அண்ணா என்று பெயரிடப்பட்டுள்ள அந்த சீரியலின் ஷூட்டிங் சில மாதங்களுக்கு முன்னால் தொடங்கிய நிலையில், தற்போது முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் அலகு குத்தி மிர்ச்சி செந்தில் முருகன் பாடலுடன் நடந்து வரும் வீடியோவை ப்ரோமோவாக வெளியிட்டிருக்கிறது சீரியல் குழு. ரேடியோ மிர்ச்சி என்கிற வானொலியில் ஆர்.ஜேவாக தனது வாழ்க்கையை தொடங்கியவர் செந்தில். பின்னர் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “மதுர” என்கிற சீரியலில் ஹீரோவாக அறிமுகமானார். 2007 முதல் 2009 வரை ஒளிபரப்பான இந்த தொடர் மக்களின் மனம் கவர்ந்த தொடராக இருந்தது. அதன் பின்னர் இரண்டு ஆண்டுகள் இடைவெளி எடுத்துக் கொண்ட அவர், மீண்டும் 2011 ஆம் ஆண்டு சரவணன் மீனாட்சி என்கிற சீரியலின் மூலமாக மீண்டும் சின்னத்திரைக்குள் கம் பேக் கொடுத்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மிர்ச்சி செந்தில் நடிக்கும் புது சீரியல்..! ப்ரோமோவை வெளியிட்ட ஜீ தமிழ்.! இதோ வீடியோ.! 1
செந்திலின் வாழ்க்கையில் இந்த சீரியல் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்திருந்தது. சரவணன் மீனாட்சி சீரியலுக்கு பின்னர் செந்திலுக்கு ரசிகர் பட்டாளம் மிகப் பெரிய அளவில் பெருகியது. பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் என்கிற சீரியலில் மாயன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதுவே இவர் நடித்த கடைசி சீரியல் ஆகும். அதன் பின்னர் விஜய் டிவியில் எந்த சீரியலிலும் கமிட்டாகாமல் இருந்து வந்தார். இதற்கிடையில் சமீபத்தில் செந்தில் விஜய் டிவியில் இருந்து விலகி வேறு தொலைக்காட்சிக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியானது. அந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது அவர் ஜீ தமிழுக்கு சென்றிருக்கிறார். இந்த தொலைக்காட்சியில் அண்ணா என்கிற புது சீரியலில் அவர் நடித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு இந்த நாடகத்தின் சூட்டிங் சென்னையில் வைத்து தொடங்கி இருந்தது. இதில் செந்திலுக்கு ஜோடியாக நடிகை நித்யா ராம் நடிக்க இருக்கும் புகைப்படங்கள் வெளியானது.


மேலும் செந்திலுக்கு மூன்று தங்கைகள் எனவும், தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் இரண்டு தங்கைகள் மட்டும் காட்டப்பட்டிருப்பதாகவும், மூன்றாவது தங்கையாக பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரித்திகா நடிக்க இருப்பதாகவும், அவருடன் இருக்கும் ப்ரோமோ விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. நீங்களும் தற்போது வெளியாக இருக்கும் ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

Youtube Video Embed Code Credits: Zee Tamil

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்