Categories: சினிமா

பொங்கல் ரேஸில் இருந்து விலகும் லால் சலாம்.?? அருண் விஜய் படத்தை இறக்கிய லைகா.! என்ன காரணம்.?

வெளியிட்டது

தமிழ் திரையுலகில் வருகிற பொங்கலுக்கு பல படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. 2024ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அயலான், கேப்டன் மில்லர், லால் சலாம், ஆகிய படங்கள் வெளியாக இருக்கும் நிலையில் தற்போது இன்னொரு படமும் இந்த வரிசையில் இணைந்திருப்பதை படத்தை தயாரித்திருக்கும் லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. பண்டிகை தினங்களில் தமிழ் திரைப்படங்கள் வெளியாவது வழக்கமான ஒன்று. தீபாவளி, ஆங்கில புத்தாண்டு, தமிழ் புத்தாண்டு, பொங்கல், விநாயகர் சதுர்த்தி, சரஸ்வதி பூஜை ஆகிய விடுமுறை தினங்களில் படங்களை வெளியிடுவதை தயாரிப்பு நிறுவனங்கள் வழக்கமாக வைத்திருக்கின்றன.

பொங்கல் ரேஸில் இருந்து விலகும் லால் சலாம்.?? அருண் விஜய் படத்தை இறக்கிய லைகா.! என்ன காரணம்.? 1
அந்த வகையில் இந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் ‘அயலான்’, தனுஷ் நடித்திருக்கும் ‘கேப்டன் மில்லர்’ மற்றும் ரஜினிகாந்தின் மகள் இயக்கி இருக்கும் ‘லால் சலாம்’ ஆகிய திரைப்படங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அனைத்துமே மிகப்பெரிய நடிகர்களின் படம் என்பதால் ஏதாவது ஒரு திரைப்படம் பொங்கல் தினத்தில் இருந்து பத்து நாட்கள் தள்ளி வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே லைகா நிறுவனம் தயாரித்திருக்கும் ‘லால் சலாம்’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அதே நிறுவனம் தயாரித்திருக்கும் மற்றொரு படமும் பொங்கலுக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.


இயக்குனர் ஏ.எல் விஜய் இயக்கத்தில் எமி ஜாக்சன், அருண் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவரும் ‘மிஷன் சாப்டர் 1 – அச்சம் என்பது இல்லையே’ என்கிற திரைப்படமும் வருகிற பொங்கலுக்கு வெளியாக இருப்பதாக லைகா நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் பொங்கல் ரேஸிலிருந்து சில படங்கள் விலகுவதாக தெரிகிறது. அந்த வகையில் சுந்தர் சி இயக்கி வரும் ‘அரண்மனை 4’ திரைப்படமும் பொங்கல் ரிலேசிலிருந்து தள்ளிப் போக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. தொடர்ந்து பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட ‘லால் சலாம்’ திரைப்படமும் இந்த போட்டியிலிருந்து பின்வாங்க இருப்பதாக தெரிகிறது. அதற்கு முக்கிய காரணமாக இந்த படத்தின் சாட்டிலைட் உரிமம் இன்னும் விற்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. எனவே பொங்கல் ரேஸில் இருந்து ‘லால் சலாம்’ திரைப்படம் தள்ளிப் போக இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.


நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியிருக்கும் படம் தான் ‘லால் சலாம்’. விஷ்ணு விஷால், விக்ராந்த், தம்பி ராமையா மற்றும் சிறப்புத் தோட்டத்தில் சூப்பர் ஸ்டார் ஆகியோர் நடித்துள்ள இந்த திரைப்படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. சாட்டிலைட் உரிமம் இன்னும் கிடைக்க பெறாத காரணத்தினால் லால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போகும் என்றும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்