ஊரை காலி செய்து போக முடிவெடுத்த வேதாவின் பெற்றோர்கள்.! கை கூப்பி கெஞ்சும் தன்வி.!

வெளியிட்டது

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘மோதலும் காதலும்’ என்கிற சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் பெற்றோரின் எதிர்ப்பை மீறி வேதா விக்ரமை திருமணம் செய்து கொண்டு விட்டதால் வேதாவின் தாயார் காவேரி மற்றும் தந்தை இருவரும் வீட்டை காலி செய்துவிட்டு ஊரை விட்டு செல்ல முடிவெடுத்து இருக்கின்றனர். அப்போது அவர்களிடம் கெஞ்சி கேட்கும் தன்வி நான் மீண்டும் ஆதியின் வீட்டிற்கே சென்று விடுகிறேன். எனக்காக நீங்கள் வேதாவை தண்டித்து விடாதீர்கள் என்று கெஞ்சி கேட்கிறார். இதனால் மனம் நெகிழ்ந்து போன வேதாவின் தந்தை, நான் வேதாவை விட்டு செல்ல போவதில்லை என்கிற முடிவெடுத்திருக்கிறார். ஆனால் வேதாவின் தாய் காவேரி என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பது தெரியவில்லை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஊரை காலி செய்து போக முடிவெடுத்த வேதாவின் பெற்றோர்கள்.! கை கூப்பி கெஞ்சும் தன்வி.! 1
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘மோதலும் காதலும்’ தொடர் சற்று வித்தியாசமான கதையம்சம் கொண்டது. விவாகரத்து பெற்ற விக்ரம் தனது மகளுடன் வீட்டில் வாழ்ந்து வருகிறார். அவரது எதிர் வீட்டில் குழந்தை நல மருத்துவரான வேதா வாழ்ந்து வருகிறார். அப்போது வேதாவுக்கும் விக்ரமின் மகள் தன்விக்கும் நல்ல நெருக்கம் ஏற்படுகிறது. விக்ரமுக்கு இரண்டாவது திருமணம் நடைபெற்றால் அவரது மகளை அவருடனே வாழ நீதிமன்றம் அனுமதிப்பதாக கூறியிருந்தது. ஆனால் யாரை திருமணம் செய்து கொள்வது என்று தெரியாமல் இருந்த விக்ரம் இத்தனை நாள் தன்னை எதிர்த்து வந்த வேதாவை திருமணம் செய்து கொள்கிறார். திருமணம் முடிந்து வீட்டிற்கு வரும் அவர்களை வேதாவின் பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.


இந்த நிலையில் தற்போது வெளியாக இருக்கும் ப்ரோமோவில் வேதாவின் தாயார் மற்றும் தந்தை இருவரும் ஊரே காலி செய்துவிட்டு செல்வதாக கூறிவிட்டு செல்கின்றனர். அப்போது தன்வி தனக்காக வேதாவை தண்டித்து விடாதீர்கள் என்று கை கூப்பி கேட்கிறார். இதனால் மனம் மாறும் வேதாவின் தந்தை வேதவுடனே இருக்க முடிவு செய்துவிட்டார். ஆனால் வேதாவின் தாயார் காவேரி என்னும் முடிவு எடுக்கப் போகிறார் என்பது தெரியாமல் சஸ்பென்ஸுடன் ப்ரோமோ நிறைவடைந்து இருக்கிறது. நீங்களும் தற்போது வெளியாகியிருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்