வேதாவை கைது செய்து தரதரவென இழுத்துச் சென்ற போலீஸ்.! பரிதவிக்கும் விக்ரம்.! மோதலும் காதலும் ப்ரோமோ

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘மோதலும் காதலும்’ சீரியலில் தற்போது வேதாவை போலீசார் கைது செய்து அழைத்துச் செல்கின்றனர். இதனால் விக்ரம் என்ன முடிவெடுக்கப் போகிறார்? வேதாவை எப்படி மீட்க போகிறார்? என்கிற பரபரப்பு எழுந்துள்ளது. விஜய் டிவியில் ‘விக்ரம் வேதா’ என்கிற பெயருடன் ஆரம்பிக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி தான் ‘மோதலும் காதலும்’. பின்னர் இந்தத் தொடர் ‘மோதலும் காதலும்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதில் எதிரும் புதிருமாக இருந்த விக்ரமும் வேதாவும் திருமணம் செய்து கொள்வார்களா? இல்லையா? என்கிற விறுவிறுப்புடன் தொடங்கப்பட்ட இந்த சீரியலில் தற்போது இருவரும் பல தடைகளை மீறி திருமணம் செய்து கொண்டுள்ளனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேதாவை கைது செய்து தரதரவென இழுத்துச் சென்ற போலீஸ்.! பரிதவிக்கும் விக்ரம்.! மோதலும் காதலும் ப்ரோமோ 1
மனைவியை பிரிந்து தனது குழந்தையுடன் வாழ்ந்து வரும் தொழிலதிபரான விக்ரம் மீது, குழந்தை நல மருத்துவராக இருக்கும் எதிர் வீட்டில் வசிக்கும் வேதாவுக்கு காதல் மலர்கிறது. இருவரும் பல தடைகளை மீறி திருமணம் செய்து கொள்கின்றனர். இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் வேதாவின் மருத்துவமனைக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் வருகின்றனர். அவர்கள் இந்த மருத்துவமனையில் சில முறைகேடுகள் நடப்பதாக கூறுகின்றனர். மேலும் வேதாவிடம் அவருடைய மருத்துவர் லைசன்ஸ் காண்பிக்கும்படி கூறுகின்றனர். அப்போது அந்த லைசன்ஸ் காலாவதி ஆகிவிட்டதாக கூறி வேதாவை கைது செய்து அழைத்து செல்கின்றனர். அப்போது அந்த நேரம் பார்த்து விக்ரம் உள்ளே வருகிறார்.


மேலும் வேதாவின் கிளினிக்கை மருத்துவ அதிகாரிகள் சீல் வைத்துவிட்டு செல்கின்றனர். அந்த நேரம் பார்த்து போலீஸ் அதிகாரிகள் வந்து வேதாவை கைது செய்ய வாரன்ட்டுடன் உள்ளே வருகின்றனர். அவர்கள் வேதாவை கைது செய்து அழைத்து செல்கின்றனர். இதனால் விக்ரம் நிலை குலைந்து போயிருக்கிறார். அவர் வேதாவை காப்பாற்றுவாரா? இந்த சிக்கலில் இருந்து வேதாவை எப்படி விக்ரம் மீட்கப் போகிறார்? என்கிற பரபரப்பு எழுந்துள்ளது. நீங்களும் தற்போது வெளியாகியிருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்