Categories: அரசியல்

காந்தியின் பெயரை தவறாக பயன்படுத்தும் மோடி!

மகாத்மா காந்தியின் பெயரை தவறாக பயன்படுத்துவதாக பிரபல வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹா தெரிவித்துள்ளார்.

காந்தியின் பெயரை தவறாக பயன்படுத்தும் மோடி! 1
ராமச்சந்திர குஹா

மகாத்மா காந்தியின் நினைவு தினத்தைமுன்னிட்டு அகமதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ராமச்சந்திர குஹா பங்கேற்று பேசினார்.

அப்போது அதில், “மோடி 2014-இல் பிரதமராவதற்கு முன்பாக காந்தியை நேசித்தாரா?” என்று கேள்வி எழுப்பியுள்ள குஹா, தன்னை வளர்த்துக்கொள்வதற்காக மகாத்மா காந்தியின் பெயரை மோடி துஷ்பிரயோகம் செய்வதாக குற்றம் சாட்டியுள்ளார்.

“மகாத்மா காந்தி உயிருடன் இருந்திருந்தால் குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிச்சயம் எதிர்த்திருப்பார். ஆனால் பிரதமர் மோடியோ, காந்தியை தவறாக மேற்கோள் காட்டி மக்களை ஏமாற்றுகிறார். அரசும், நீதித்துறையும் அகிம்சை வழியைத்தான் கடைப்பிடிக்க வேண்டும்.

ஆனால், இந்தியாவின் இரண்டு முக்கியமானவர்களின் (மோடி, அமித்ஷா) பேச்சிலும் வன்முறையே தொனிக்கிறது. ஷாகீன்பாக் போராட்டப் பெண்களைப் பற்றிய, நம்உள்துறை அமைச்சரின் கருத்து மோசமானது. எந்தவொரு நாகரிகமான ஜனநாயகநாட்டிலும் அவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

உள்துறை அமைச்சரே இப்படிப் பேசுவதால் அவருக்குக் கீழ் இருப்பவர்கள் அதை விடவும் மோசமாகப் பேசிவருகின்றனர்” என்றும் ராமச்சந்திர குஹா தெரிவித்துள்ளார்.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்