சின்னத்திரை நடிகை மகாலட்சுமியின் கணவரும் தயாரிப்பாளருமான ரவீந்திரன் அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவரிடம் 15 லட்சம் ரூபாய் கடனாக வாங்கிவிட்டு, அதை ஒரு வருடமாக கொடுக்காமல் ஏமாற்றி இருப்பதாக தற்போது புகார் ஒன்று எழுந்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த மின் பொறியாளரான விஜய் தற்போது ரவீந்தர் குறித்து கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராகவும் பிக் பாஸ் பற்றிய விமர்சனங்களை கூறியும் பிரபலமானவர் ரவீந்தர் சந்திரசேகர். லிப்ரா என்கிற ஒரு தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி பல படங்களை தயாரித்திருக்கிறார். இவர் கடந்த வருடம் சீரியல் நடிகை மகாலட்சுமி திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து இவர் சோசியல் மீடியாவில் மிகப் பிரபலமானார். தொடர்ந்து இருவரும் சமூக வலைத்தளங்களில் வைரல் ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். இவர்களின் திருமணம் நெட்டிசன்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ரவீந்தர் கடுமையாக உருவக்கேலி செய்யப்பட்டார்.

சில ஆண்டுகளாக பெரிய அளவில் படங்கள் எதையும் தயாரிக்காமல் இருந்து வந்த ரவீந்தர், தற்போது படம் தயாரிக்க இருப்பதாகவும் அதற்கு நடிகருக்கு அட்வான்ஸ் கொடுக்க வேண்டும் என்று அமெரிக்காவைச் சேர்ந்த மென்பொறியாளர் விஜயிடம் 20 லட்சம் ரூபாய் பணம் கேட்டிருக்கிறார். ஆனால் விஜயோ தன்னிடம் 20 லட்சம் ரூபாய் இல்லை 15 லட்ச ரூபாய் இருக்கிறது என்று சொல்லி இரண்டு தவணையாக அந்த பணத்தை ரவிந்தருக்கு அனுப்பி இருக்கிறார். பதினாறு லட்சமாக ஒரே வாரத்தில் திருப்பிக் கொடுப்பதாக விஜய்க்கு வாக்குறுதி கொடுத்திருக்கிறார் ரவீந்தர். ஆனால் ரவீந்தர் சொன்னபடி பணத்தை கொடுக்காமல் கடந்த ஒரு வருடமாக இழுத்து அடித்து வந்ததால் ரவீந்தர் மீது கடுப்பான விஜய் அவரிடம் பணத்தைக் கேட்டு மெசேஜ் அனுப்ப ஒரு கட்டத்தில் விஜயின் செல்போன் நம்பரை பிளாக் செய்து இருக்கிறார் ரவீந்தர். இதனால் விஜயின் மனைவி ரவீந்திரனை தொடர்பு கொண்டு பணம் குறித்து கேட்டபோது அவரை தகாத வார்த்தைகளால் பேசி திட்டி இருக்கிறார் ரவீந்தர்.
இதனால் மனம் நொந்து போன அமெரிக்காவை சேர்ந்த மின் பொறியாளரான விஜய் அமெரிக்காவில் இருந்தபடியே ஆன்லைன் மூலமாக கமிஷனர் அலுவலகத்திற்கு புகார் ஒன்றை அளித்திருக்கிறார். தன்னிடம் பணம் பெற்றுக் கொண்டு, தான் அவரிடம் கடன் வாங்கியது போல தன்னை தகாத வார்த்தைகளால் ரவீந்திரன் பேசி வருவதாகவும், செக் அனுப்பி இருப்பதாகவும், வங்கி விடுமுறை என்றும் பலவிதமான கதைகளை சொல்லி வருகிறார் என்றும் விஜய் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார். இது குறித்து ரவீந்திரிடம் கேட்டபோது தான் அவரிடம் இருந்து 15 லட்சம் வாங்கியது உண்மைதான். ஆனால் இந்த பணத்தை வெளிநாட்டிலிருந்து இங்கு கொண்டுவர முடியாமல் விஜய் தன்னிடம் கொடுத்து வைத்திருப்பதாகவும், விஜயின் பெற்றோர்கள் அல்லது உறவினர்கள் வந்து கேட்டால் இந்த செக்கை கொடுத்து விடுவேன் என்று பதில் அளித்திருக்கிறார். தற்போது இந்த விவகாரம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.