நடிகர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா, ஊர்வசி நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த படம் மூக்குத்தி அம்மன். இப்படத்தில் நயன்தாரா அம்மனாக நடித்து அசத்தியிருப்பார். அதேபோல் ஆர்ஜே பாலாஜி மற்றும் ஊர்வசி இருவரும் காமெடியில் கலக்கி இருப்பார்கள். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருந்தது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாகம் உருவாக இருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தது.

இதுகுறித்த அப்டேட்டை இன்று மாலை படக்குழு வெளியிடுவதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது படம் குறித்த அப்டேட்டை தயாரிப்பு நிறுவனம் வேல்ஸ் அறிவித்து உள்ளது. வேல்ஸ் மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் மூக்குத்தி அம்மன் 2 ஆம் பாகத்தை பிரபல இயக்குனர் சுந்தர் சி இயக்க உள்ளார். மிகப்பெரிய பட்ஜெட்டில் இப்படம் உருவாக உள்ளது.
படத்தின் இசையமைப்பாளரை உறுதி செய்யாத நிலையில் தற்போது சுந்தர் சி படத்தில் கமிட் ஆகியுள்ளார். இதனால் படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்து உள்ளது. அண்மையில் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 4 மாபெரும் வெற்றி அடைந்த நிலையில் தற்போது அடுத்த வெற்றிக்கு இயக்குனர் சுந்தர் சி அடித்தளம் போட்டு உள்ளார்.