Categories: சினிமா

மௌன ராகம் தருணுக்கு திடீரென நடந்த நிச்சயதார்த்தம்..! பொண்ணு யாருனு தெரியுமா?

வெளியிட்டது

மௌன ராகம் சீசன் 2 சீரியலில் தருண் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் ராகுல் ராமுக்கு தற்போது நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

மௌன ராகம் தருணுக்கு திடீரென நடந்த நிச்சயதார்த்தம்..! பொண்ணு யாருனு தெரியுமா? 1

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் டாப் ஹிட் தொடர்களில் ஒன்றான மௌன ராகம் சீசன் 2வில் தருண் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ராகுல் ராமச்சந்திரன். இவருக்கு ஏராளமான பெண் ரசிகைகள் உள்ளனர்.

கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் தமிழில் மௌன ராகம் என்ற சீரியல் மூலமாக முதன் முதலில் அறிமுகமாகி இருக்கிறார். கதைப்படி இவர் ஹீரோ வருணின் தம்பியாகவும், வில்லி ஸ்ருதியின் கணவராகவும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

மனைவி வில்லத்தனங்களை செய்த போதும், இவர் நல்லவராகவே கதையில் தொடர்கிறார். அதற்காகவே இவருக்கு பல ரசிகர்கள் உண்டு. மலையாளத்தில் பல சீரியலில் இவர் நடித்திருக்கிறார்.

குறிப்பாக மலையாள மனோரமா சேனலில் என்னும் சம்பந்தம் என்னும் சீரியலில் இவர் ஹீரோவாக நடித்து வருகிறார். இது மலையாள சின்னத்திரையில் மிகப்பெரிய ஹிட் அடித்துள்ள ஒரு தொடராகும்.

இந்த நிலையில் ராகுல் தனது பல வருட காதலியான அஸ்வதியுடன் திருமண நிச்சயதார்த்தத்தை முடித்து இருக்கிறார். ராகுலும் அஸ்வதியும் பல வருடங்களாக காதலித்து வருகின்றனர்.

 

தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் தனது காதலி அஸ்வதியுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வந்தார். சமீபத்தில் தான் இருவரும் காதலிப்பதை உறுதிப்படுத்தி இருந்தார்கள். இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் கேரளாவில் வைத்து நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.

 

 

இவர்களுக்கு மௌனராகம் சீரியலின் ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். சாக்லேட் பாயாக இருக்கும் ராகுலின் திருமணத்தால் மௌன ராகத்தின் சில ரசிகைகள் ஏமாற்றத்தில் இருக்கின்றனர். இவர்களின் நிச்சயதார்த்தத்திற்கு மௌன ராகம் சீரியலில் ராகுலின் அண்ணனாக நடிக்கும் சல்மானும் சென்று வாழ்த்தி இருக்கிறார். அந்த வீடியோவை ராகுலின் மனைவி அஸ்வதி தனது youtube பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். நீங்களும் அந்த வீடியோவை காண.. Watch the below video..

YouTube Video Code Embed Credits: ASWATHY RAHUL.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்