மௌனராகம் தொடரின் ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. அதில் தருணின் அம்மா கஸ்தூரியை மீட்டு ஸ்ருதி தருணின் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார். மௌன ராகம் சீசன் 2 தற்போது மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. விஜய் டிவியில் முக்கியமான தொடராகவும், மக்களின் மனம் கவர்ந்த தொடராகவும் இது இருக்கிறது. இந்த தொடரில் பல விறுவிறுப்பான கட்டங்கள் அடுத்தடுத்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தருண் மற்றும் வருணின் அம்மாவை வருணின் அத்தை ஷீலா 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு அறையில் வைத்து பூட்டி வைத்திருந்திருக்கிறார். அவரை மீட்டு மீண்டும் ஸ்ருதி, வருண் மற்றும் தருண் வீட்டிற்கு அழைத்துச் சென்றிருக்கிறார். இதனால் இத்தனை நாள் ஸ்ருதி மீது இருந்த வெறுப்பு நீங்கி தருண் அவருடன் சேர்ந்து வாழ்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

மௌன ராகம் தொடரில் வருண் மற்றும் தருணின் தாய் கஸ்தூரி தீ விபத்தில் இறந்து விட்டதாக கூறி அனைவரும் இத்தனை நாட்கள் எண்ணியிருந்தனர். அந்த தீ விபத்தை பார்த்த வருணனுக்கு இன்னும் மனநோய் சரியாகவில்லை. ஆனால் கதையில் முக்கிய திருப்பமாக தீ விபத்தில் இருந்து கஸ்தூரியை காப்பாற்றி வருணின் அத்தை ஷீலா இத்தனை நாள் ஒரு வீட்டில் அடைத்து வைத்திருந்தார். அந்த உண்மை காதம்பரி வீட்டில் உள்ள அனைவருக்கும் தெரிய வந்தது. இதை ருக்மணி நேராக சென்று ஸ்ருதியிடம் கூறுகிறார். ஸ்ருதி உடனே கஸ்தூரியை வீட்டிற்கு அழைத்து செல்ல முடிவெடுக்கிறார். தற்போது ஸ்ருதியின் திட்டப்படியே கஸ்தூரியை மீட்டு வருண. மற்றும் தருண் வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட்டார். மேலும் அந்த வீட்டில் இருந்த கஸ்தூரி புகைப்படங்களிலிருந்து மாலைகளையும் கழற்றி எறிந்து விட்டார் ஸ்ருதி.
அப்போது அங்கு வரும் மனோகர் புகைப்படத்தில் இருந்த மாலைகளை யார் எடுத்தது என்று கேட்கிறார். இனி மாலைகள் போட வேண்டிய அவசியம் இல்லை என்று சொல்லி கஸ்தூரியை மனோகர் மற்றும் தருணிடம் ஸ்ருதி காண்பிக்கிறார். அதைப் பார்த்த மனோகர் கஸ்தூரி என்று சொல்லி காலில் விழுந்து கதறி அழுகிறார். தருண் இத்தனை நாள் எங்களை விட்டு எங்கே சென்றீர்கள் அம்மா என்று அழுகிறார். ஆனால் இது எதுவுமே கஸ்தூரிக்கு புரியவில்லை. அவர் சிலை போல் நின்று கொண்டிருக்கிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! Watch the below video.!
Youtube Video Code Embed Credits: Vijay Television