விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மௌனராகம் சீரியல் பல்வேறு இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த சீரியலாக இருக்கிறது. இந்த கதையை பல லட்சக்கணக்கான மக்கள் விரும்பி பார்த்து வருகின்றனர். இந்த சீரியலின் ப்ரோமோ வெளியான சில மணித்துளிகளில் மில்லியன் கணக்கான பார்வையாளர்களை கடந்து விடுவது வழக்கமாக இருக்கிறது. இந்த நாடகத்தில் ஹீரோயினாக ரவீனா நடித்து வருகிறார். ரவீனா ஏற்கனவே சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். இந்த கதையை பொருத்தவரை ஹீரோ கார்த்திக்கு இரண்டு மனைவிகள். மூத்த மனைவி மல்லிகாவின் மகள் தான் ரவீனா. இவர் சக்தி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இரண்டாவது மனைவி காதம்பரி. ப்ரோமோ வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது மனைவிக்கு பிறந்த குழந்தை தான் ஸ்ருதி. ஆனால் உண்மையில் ஸ்ருதி கார்த்திக் மற்றும் காதம்பரிக்கு பிறந்த குழந்தை இல்லை. இந்த உண்மை கார்த்திக்கும், கார்த்திக்கின் மூத்த மனைவிக்கு மட்டுமே தெரியும். தற்போது இந்த விஷயம் சக்தியின் அத்தைக்கும் தெரிய வந்துள்ளது. இதனால் நாடகம் விறுவிறுப்பான கட்டத்தை எப்படி இருக்கிறது. தற்போது கதையின்படி மூத்த மனைவியின் மகளான சக்தியும், இரண்டாவது மனைவியின் மகளான ஸ்ருதியும் வருண் தருண் என்ற இரண்டு அண்ணன் தம்பிகளை கல்யாணம் செய்து கொண்டு ஒரே வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். அங்கு வழக்கம் போல சக்தியை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வருகிறார் ஸ்ருதி. ஆனால் சக்தியின் கணவர் வருண் சக்திக்கு ஆதரவாக இருக்கிறார்.
தற்போது கார்த்திக்குக்கு பிறந்தநாள் வருகிறது. கார்த்திக்கையும், முதல் மனைவி மல்லிகாவையும் வைத்ருது ஒரு கச்சேரியை நடத்த சக்தி, வருண் ஆகியோர் திட்டமிடுகின்றனர். இதனால் கடுப்பாகும் இரண்டாவது மனைவி காதம்பரி மற்றும் அவரது தந்தை விஸ்வநாதன் இதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்று நினைக்கின்றனர். இதனால் மல்லிகாவை சந்தித்து நீ கார்த்தி கூட இணைந்து பாடக்கூடாது என்று மிரட்டுகிறார் விஸ்வநாதன். அப்படியே பாடினால் சக்தியை கொன்றுவிடுவேன் என்றும் மிரட்டுகிறார். இதனால் கோபமான சக்தி நேராக காதம்பரி வீட்டிற்கு சென்று என் தாயை நான் எப்படியாவது என் அப்பாவுடன் இணைந்து பாட வைப்பேன் என்று சபதம் எடுக்கிறார். தெறியாக இருக்கும் அந்த ப்ரோமோவை நீங்களும் காண….Watch the below video..!
Youtube Video Code Embed Credits: Vijay Television